இலங்கையில் ஷீஆக்கள்...

ஆசிரியர் : தழிழ் சுன்னா இணையம்

இலங்கையில் ஷீஆக்களின் அசுர வளர்ச்சி அக்கினிச் சுடராய் வேகம் பெறுகிறது. எமது பூர்வீகம், இன்று நேற்று தோற்றம் பெற்றதல்ல. நிரந்தர பூர்வீகத்தைக் கொண்டவர்கள் நாங்கள். எமது தேசிய வரலாற்றில் இஸ்லாமியப் போலிகளால் உண்டான சில கறுப்புப் பக்கங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஷீஆக்களின் தோற்றம். இது குறித்த கனமான வாசிப்பின் அவசியம் கருதி சற்று விரிவாக நோக்குவேம்.

இலங்கையில் ஷீஆக்களின் தோற்றம், அதன் ஆரம்பம் குறித்த குறிப்புகளை தேடும்போது முறையான எந்தக் குறிப்பையும், ஆய்வையும் காணமுடியவில்லை. ஷீஆக்களின் கொள்கைப்பரப்பு பற்றி பேசப்பட்டளவும் எழுதப்பட்டளவும், தோற்றம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இருப்பினும் குறிப்பிடத்தக்க அக்கால த்தில் வாழ்ந்த நடுநிலை முக்கியஸ்தர்கள் பலரின், நேரடி சந்திப்புக்கள், மறுக்க முடியாத ஆவணங்களில் இருந்து கிடைக்கப்பெறும் குறிப்புக்களை வைத்து இவ்வாக்கம் முன்வைக்கப்படுகின்றது.

தாயக ஷீஆக்களின் தோற்றம் குறித்த வாசிப்பை நோக்கும் போது மறக்கவும், மன்னிக்கவும் முடியாத வரலாற்று பெரும் தவறை செய்து, இன்றளவும் திருத்திக் கொள்ளாத நிலையில் பல தனி நபர்களும் இயக்கங்களும் இருந்து கொண்டிருக்கின்றன. ஷீயாக்களின் விஷ விதைப்புக்கு தாயகத்தை தாரைவார்த்து, பெரும் களத்தை ஏற்படுத்தி கொடுத்த பெருமை இவர்களையே சாரும்.

1979களில் ஈரானில் குமை னியின் ஈரானிய புரட்சி குறித்து 'குமைனியின் புரட்சி இஸ்லாமியப் புரட்சி, இஸ்லாமியர்கள் அதை ஆதரிக்கவேண்டும்' என்று புகழா ரம் சூடினர். இக்கருத்தின் தாக்கம் தான் இலங்கை, இந்தியா, பாகிஸ் தான், பங்களாதேசம் போன்ற நாடுகளில் ஷீஆக்களின் தோற்றம் சூடு பிடிக்க காரணமாயின.அவ்வியக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த எல்.டீ.ஏ. இஸ்ஹாக் என்பவரால் மீராவோடை எனும் கிராமத்தில் துளிர்விட ஆரம்பிக்கிறது இந்த ஷீஆ மத விதைப்புப் பணி.

ஷீஆக்களின் உண்மை முகத்தை இஸ்லாமிய உலகின் அண்மைக்கால சில நிகழ்வுகளை மையமாக வைத்து, (குறிப்பாக சிரியா விவகாரம்) அதிகமானோர் அடையாளம் கண்டு கொண்டனர் என்பதை பல சந்திப்புகளில், சமூ கத்தளங்களில் அவதானிக்க முடிகிறது. அன்றைய நாட்களில் ஆய் வுகளுக்கான போதிய வளமின்மை, இஸ்லாமிய அகீதா...ஈரானின் ஆட்சி முறைமை மற்றும் யாப்பு, என்பன பற்றிய போதிய தகவல்கள் கிடைக்கப் பெறாமை என்பனவே எமது ஷீஆக்கள் குறித்த பிழையான நிலைப்பாட்டுக்கு காரணம் எனும் வாதம் இவர்களிடையே வளர ஆரம்பித்துள்ளது.

வழிகேடன் அஹ்மத் நஜாத்தை 'இரும்பு மனிதனாகவும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகனாகவும் காட்ட முனைந்தமை, ஈரானின் அணுப்புரட்சி மற்றும் இஸ்ரேலை உலகப்படத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பன போன்ற தலைப் புக்களில் ஈரானின் போலி நாட கத்தை தொடராக அரங்கேற்றியமை என்பன தவறான புரிதல்களின் பிரதிபலிப்பாக அமைந்தது.


இந்த இடத்தில் கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்களின் ஷீஆக்கள் குறித்த இறுதி நிலை பாட்டையும் குறிப்பிடுவது சாலப் பொருத்தமாகும். 'இதுவரை கால மும் ஷீஆக்கள் குறித்து பிழை யான நிலைப்பாட்டில்; இருந்து விட்டேன், அவர்கள் குழப்பவாதிகள், இஸ்லாத்தின் விரோதிகள். சவூதி அறிஞர் பெருமக்கள் என்னை விட இவர்கள் குறித்த வாசிப்பில் மிகத் திறமை மிக்கவர்கள்...' என்று தனது ஷீஆக்கள் குறித்த கருத்தை மறுவாசிப்புக்குட்படுத்தியிருந்தார்.