எமது பொறுப்புணர்தல்...

ஆசிரியர் : தழிழ் சுன்னா இணையம்.

ஹிதாயத் எனும் நேர்வழி அல்லாஹ்வின் பக்கத்தில்; இருந்து கிடைக்கப் பெறும், பெரும் பாக்கியமாகும். அதிலும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவது என்பது அவன் செய்த மிகப் பெரும் அருளாகும். இவற்றின் மூலம் அல்லாஹ் எம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் அம்சங்களில் மிக முக்கியமானது மார்க்கத்தை பிரச் சாரம் செய்வதும், இஸ்லாத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் ஷிர்க், பித்அத் போன்ற அனாச்சாரங்களில் இருந்தும், இஸ்லாத்தின் போர்வையில் விஷ விதைப்புப்பணி மேற்கொள்ளும் கொடிய ஷீஆயிசம், காதியானி, மஹ்தி பௌண்டேஸன், பயில்வா னிஸம், வஹ்ததுல் வுஜூத் போன்ற வழி கெட்ட கொள்கைகளில் இருந்து எம்மையும், எமது சமூகத் தையும் பாதுகாத்து சத்திய இஸ்லாத்தை நாளை எமது சந்ததியினருக்கு தூய வடிவில் கொடுப்ப தாகும். இவ்வுயரிய பொறுப்பு ஈமானிய உணர்வின் வெளிப்பாடாக எம்மனைவர்களிலும் பிரதிபலிக்க வேண்டும். போலிகளே திட்டமிடல், ஒழுங்குபடுத்தலின் ஊடாக அசத் தியத்துக்கு அழைப்புப்பணி செய் யும் போது தூய கொள்கையில் இருக்கும் நாங்கள் குறிப்பாக வேக வளர்ச்சி காணும் ஷீஆ மத விதைப்புக்கெதிராக எமது அசுர, வேக தஃவா முயற்சிகள் அதி கப்படுத்தப்பட வேண்டும். ஷீஆக்கள் விடயத்திலான தஃவாவின் போது அடையாளப்படுத்தல் எனும் விடயம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஷீஆ கொள்கையின் மீது நேரடி கவர்ச்சி கண்டு, யதார்த்தம் புரிந்து எவரும் ஷீஆ கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக படிமுறை, திட்டமிட்ட முறைமை யின் ஊடாகவே எம்மில் இவர்களது ஊடுறுவல் வேகம் பெறுகிறது என்பது களம் கண்ட நிதர்சனம். எனவே குறித்த ஷீஆக்கள் விட யத்தில் பகிரங்க அடையாளப்ப டுத்தல் என்பதுதான் இன்றளவில் எமது ஈமானை ஷீஆ மதத்தில்; இருந்து பாதுகாக்க உதவும் கேட யமாகும். சிந்தனைகளையும், கள ஆய்வு, அனுபவத்தையும் மையப்ப டுத்திய சில ஆலோசனைகள் இவ் வாக்கத்தின் நிறைவு பகுதியாய் அமைகிறது.

இஸ்லாமிய இயக்கங்கள் முரண்பாட்டில் உடன்பாடு காண் பது, எனும் கற்பனை தாண்டி ஏகத்துவ தௌஹீத் சிந்தனை பேசும் அமைப்புக்கள் ஒரு கட்ட மைப்பின் கீழ் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஷீஆ மதம் பற்றிய எமது கருத்துள்ள மாற்று இயக்கத்தவர்களுக்கு மேலதிக தெளிவுகள் வழங்கப்படல் வேண்டும்.

இஸ்லாமிய வரலாறு பற்றிய சரியான புரிதலை எமது சமூகத் திற்கு அடிப்படைக் கல்வியாக போதித்தல் வேண்டும். விமர்சிக் கப்படும் வரலாறுகள் குறித்த அதன் யதார்த்தங்கள் தெளிவு படுத்தப்படுவதுடன், சமூகத்தின் சகல மட்டங்களிலும் இப்பணி துரிதப்படுத்தப்பட வேண்டும்.

பாடசாலை, மற்றும் கல்விசார் மட்டங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய நாகரிக பாட விதானங்களுக்கான ஆசிரியர் நியமித்தலில் கண்டிப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் தோன் றிய வழி கெட்ட இயக்கங்கள் குறித்த ஓப்பீட்டாய்வுகள் கணிசமா க்கப்பட வேண்டும். குறித்த இயக்கங்களின் வழிகேடுகள் ஆதா ரங்களின் அடிப்படையில் நிரூபிக்க எமக்கு மத்தியில் ஒழுங்கமைக் கப்பட்ட நிபுணர் சபை உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக உலமாக்களுக்கு இது குறித்த வாசிப்பை கட்டாயப் படுத்த வேண்டும். ஆழமான விடயங்களை துறைசார் அறிஞர்களைக் கொண்டு விரிவுரைகள் நடத்தப்பட வேண்டும்.

ஷீஆயிசத்தின் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிதலும் அவற்றைக் களைதலும்.

எனவேதான் இஸ்லாத்தின் தூய கொள்கையையும் அதன் தனித்துவத்தையும் பின்பற்றும் நாம் எதிர்கால எமது சந்ததியினருக்கு அதன் தூய்மை மங்காமல் நகர்த்துவதுடன், இஸ்லாத்தின் பெயரால் அதன் போர்வையில் வழிகேட்டையும், குப்ரையும் அரங்கேற்றும் ஷீஆக்கள், மற்றும் பல அமைப்பினர்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், அத்துடன் மக்கள் மன்றத்தில் தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் பகிரங்க அடையாளப்படுத்தும் இப்பெரும் பணியில் நம்மனைவரும் இணைந்து கொள்ளவேண்டும். தூய இஸ்லாத்தில் வாழ்ந்து அதிலேயே மரணிக்கும் உயரிய பாக்கியத்தை அல்லாஹ் நம்மனைவருக்கும் வழங்குவா