ஷீஆ மத அமைப்புகள்இலங்கை ஷீஆக்கள் தங்களது பிரச்சாரப் பணியை இலகு படுத்திட ஈரான் குடியரசின் முழு அணுசரனையின் கீழ் பல நிறுவ னங்கள், கல்விசார் அமைப்புக்கள், அரபுக்கல்லூரிகள், வெளியீடுகள் என அதன் பட்டியல் நீள்கிறது. தெளிவுக்காக வேண்டி இப்பெரும் இயலை மூன்று பகுதிகளாக நோக்குவோம்.

01) ஷீஆ மத அமைப்புகள் :
1.முஅஸ்ஸிஸதுல் ஹாஷிமிய்யா கொழும்பு
2.மர்கஸ்ஸுல் இமாம் ஜஃபர் அஸ் ஸாதிக், கொழும்பு
3.ஹுஸைனியா அத்தகலைன, கண்டி
4.இஸ்லாமிய கலை, கலாசார நிலையம் (ICC), ஓட்டமாவடி, மீராவோடை02)

கல்விசார் நிறுவனங்கள்:
1.மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரி, - ஓட்டமாவடி, மீராவோடை
2) ஸகிய்யா மகளிர் அரபுக் கல்லூரி, - பொலன்னறுவை, மாணிக்கம்பிட்டி
3) Al Mustafa International University (அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் இலங்கை கிளை கொழும்பு 05)
4) ஜாமியது தஃபீழுல் குர்ஆன், கொழும்பு

மேற்குறிப்பிடப்பட்ட அமை ப்புக்கள், கல்விசார் நிறுவனங்களில்; குறிப்பாக இன்றைய இலங்கைச்; சூழலில் பெரும் தாக்கத்தினை செலுத்தும் இரு நிறுவனங்கள் பற் றிய கட்டாயக் குறிப்பு பின்வருமாறு.

1. மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரி - ஓட்டமாவடி, மீராவோடை:

1986 களில் மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதி, ஓட்டமாவடி, மீராவோடை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதே ஆண்களுக்கான அரபுக் கல்லுரியா கும். இலங்கை தேசத்தின் ஷீஆ கொள்கையின் காவலன்; எல். டீ.ஏ. இஸ்ஹாக் என்பவனின் ஈரான் விஜ யத்தின் பின்னர் அவனது கோரப் பிடியில் சிக்கிய இக்கல்லூரி ஷீ ஆக் கொள்கையை துளிர்விட ஆரம்பித்தது.

கொள்கைப் பரப்பு விடயத் தில் ஆரம்ப காலங்களில் பெரும் தாக்கம் செலுத்தாவிட்டாலும் பிற்பட்ட காலங்களில் குறிப்பாக இன்றளவு தேசியத்திலும், தெற்காசியாவின் ஷீஆக்களின் கொள்கைப் பரப்பு மையமாக செயற்படுகிறது.

இதுவரைக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியாகியுள்ளனர். குறிப்பிட்ட சிலரைத் தவிர மிகுதி அனைவரும் இக் கொள்கையின்; பரப்புனர்க ளாகவே செயற்படுகின்றனர். இவர் களின் பிற்பட்ட கால ஒன்று கூடல்கள், அமர்வுகள். என சில நிர்வாகத் தேவை கருதி (ICC) எனும் ஒரு நிறுவனத்தை குறித்த பிரதேசத்தில் உருவாக்கினர். இதன் செயற்பாடுகள் இப்பிராந்தி யத்திலும், தேசியத்திலும் பெரும் வளர்ச்;சி கண்டுள்ளது.

இக்கல்லூரியின் தோற்றம் முதல் இன்று வரை ஈரானின் பிர பல ஷீஆ மத பல்கலைக்கழகங் களான 'அல்கும்', 'அல்முஸ்தபா' போன்ற மற்றும் பல பல்கலைக்கழகங்களுக்கு உயர் கற்கைக்காக வருடந்தோரும் மாணவர்கள் அனுப்பி வைக்கப் படுகிறார்கள். இன்றளவில் இக்கல்லூரியில் பட் டம் பெற்றவர்களில் ஈரான் சென்று கலைமானி, முதுமானி கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்து தாயகம் திரும்பியவர்கள், தற் போது கற்பவர்கள் என 30 - 40 க்கும் அதிகமானவர்களை கணக்கிட முடியும். இதில் இஸ்ஹாக், அப்துல் ஹலீம், மர்சூக், அலிகான், மஹ்தி இஸ்ஹாக், அஷரப் அலி போன்ற வேக அழைப்பாளர்களும் உள்ளடங்குவர்.

இக்கல்லூரியின் மற்று மொரு விஷேடம் இலங்கையின் எப்பாகத்தில் ஷீஆ விஷ விதைப்பு துளிர்விட ஆரம்பிக்கின்றதோ அங்கெல்லாம் இக்கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள், தொடர்புடையவர்களின் செயற்பாடுகள் இல்லாமல் இல்லை என்பது கள ஆய்வின் மற்றுமொரு முடிவாகும். மிக அண்மையில் 6வது பட்டமளிப்பு விழா இலங்கைக்கான ஈரானிய தூதுவரின் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2.அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் (Al Mustafa International University)

ஈரானின் புனித(?) நகர் ஒன்றில் இயங்கும் சர்வதேச பல் கலைக்கழகமான அல்முஸ்தபா வின் கிளைகள் இந்தோனேசியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் தொடர்ச்சியில்; இலங்கையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலக்கம் 49\3 Fife Road, Colombo - 5 முகவரியாகக் கொண்ட இப்பல் கலைக்கழகத்தின் கிளை கடந்த ஒக்டோபர் மாதம் 2012ல் இலங்கைக்கான ஈரானிய தூதுவரினால் கல்வி அமைச்சின் அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ் வில் முஸ்லிம் பெயர்தாங்கி அரசி யல்வாதிகள், பிரமுகர்கள், பொது மக்கள் என பெரும் தொகையா னோர் கலந்து கொண்டனர்.

இக்கல்வி நிறுவனத்தில் B.A In Islamic Studies – English and Arabic Medium க்கான விண்ணப்பங்கள் குறிப்பாக உலமாக்களிடம் இருந்து கோரப்படுகின்றன. இதற்கான விளம்பரங்கள் வீர கேசரி, சுடர் ஓளி போன்ற பத்திரி கைகள், சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் என பல மட்டங் களில் பரவலாக்கப்படுகிறது. அண் மையில் உயர் கல்வி அமைச்சர் S.P திஸாநாயக தலைமையில் மானிடவியல் கற்கைப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. இக்கற்கை நெறிகளின் போது ஆண்களும், பெண்களும் கலவனாக பாட அறை, குழுச் செயற்பாடுகள் என நிர்ப்பந்திக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.


இப்பல்கலைக்கழகத்தின் கிளையின் துவக்கமானது முன்னர் குறிப்பிட்டது போல ஷீஆ விஷப் பரப்பலுக்கான  (خطة خمسينية)எனும் 50 வருட திட்டத்தின் ஓர் அங் கமாகவே கருத முடிகிறது. காரணம் இத்திட்டத்தின் பிரதான இலக்கும், நோக்கும் கொள்கைத் திணிப்பு, மற்றும் கல்வியின் ஊடாக சிந்தனை மாற்றம் என் பதினை அடிப்படையாக கொண்டமையே!

ஆசிரியர் : தழிழ் சுன்னா இணையம்