ஹலப் வெற்றி கொள்ளப் படுமுன் ....


முற்றுகைக்குள்ளாகி இருந்த சிவில் மக்களுக்கு எந்த உதவியும் சேரவில்லை.
ஐ நாவின் உதவிகள் அந்த மக்களுக்கென்று கூறி 75 மில்லியன் டொலர்கள் பஷ்ஷாருல் அஸதின் மனைவியின் பெயரிலுள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருந்தன. அது எதுவுமே அம்மக்களைப் போய்ச் சேரவில்லை.

அவ்வேளை விமானத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் யுத்த நிறுத்தம் வேண்டியும் முன் வைக்கப் பட்ட எந்த கோரிக்கையும் கணக்கில் எடுக்கப் படவில்லை.

ஹலப் விடுதலைப் போரை முஜாஹிதீன்கள் ஆரம்பித்தபின் ..ரஷ்ய ஹெலி கொப்டர் வீழ்த்தப் பட்டபோது அது ஹலப் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சென்ற வேளை தாக்கப் பட்டதென வெட்கமின்றி கூறினர். முற்றுகையை உடைத்த மறுதினம் அத்தியவாசியப் பொருட்களுடன் சென்ற ஒரு தொண்டு நிறுவன வாகனத் தொடரணியை தாக்கியளித்தனர்.

ஹலப் வெற்றி கொள்ளப் பட்ட பின்... அஸதின் படைகள் தோற்கடிக்கப் பட்டு ஈரானிய புரட்சிப் படையினர் பலர் கொல்லப் பட்டு ஹிஸ்புல்லா கிரிமினல்கள் சடலங்களாக்கப் பட்ட பின்... யுத்த நிறுத்தம் இந்த நிமிடமே வேண்டுமென அறிக்கை விடுகின்றனர். ஐ நா ஒரு பக்கம் ... பிரான்ஸ் இன்னொரு பக்கம்... அரபு சியோனிஸ்டுகள் மற்றொரு புறம்... இந்தப் பாட்டை நிறுத்தாமல் பாடுகின்றனர்.
ஹலப் முழுமையாக வெற்றிகொள்ளப் படும்... இன்ஷா அல்லாஹ் 

by: Fairooz Mahath

Post a Comment