சீஆக்களின் ஹஜ்!!


("இம்முறை ஈரானியர்கள் ஹஜ் செய்வதற்கான ஒழுங்குமுறைகள் பற்றிய சஊதி தரப்புடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன" என்ற செய்தியை வாசித்த போது எழுதியது)

"யார் ஹுஸைன்(றழி) அவர்களின் அந்தஸ்தை அறிந்து, பெருநாள் தினம் அல்லாத வேறு நாட்களில்  அவரது கப்ரை ஸியாரத்து செய்கிறானோ அவனுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட இருபது ஹஜ் செய்த நன்மைகளையும் இருபது அங்கீகரிக்கப்பட்ட உம்றா செய்த நன்மைகளையும் அல்லாஹ் வழங்குவான்.

பெரு நாள் தினத்தில் ஸியாரத்து செய்தால் அவனுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ் செய்த நன்மைகளையும் நூறு அங்கீகரிக்கப்பட்ட உம்றா செய்த நன்மைகளையும் அல்லாஹ் வழங்குவான்.

அறபா தினத்தில் ஸியாரத்து செய்தால் அவனுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஹஜ் செய்த நன்மைகளையும் ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட உம்றா செய்த நன்மைகளையும் ஒரு நபியோடு அல்லது நேர்மையான இமாமோடு ஆயிரம் யுத்தகளத்தில் கலந்து கொண்ட நன்மைகளையும் அல்லாஹ் வழங்குவான். (குலைனி ஃபுரூஉல் காபி 1/324

ஜஃபர் கூறுகிறார்:

ஹுஸைன்(றழி) அவர்களின் கப்ரின் சிறப்பையும் அதை தரிசிப்பதின் சிறப்பையும் நான் உங்களுகுச் சொன்னால் நீங்கள் ஒரேயடியாக ஹஜ்ஜை விட்டு விடுவீர்கள். உங்களில் ஒருவரும் ஹஜ் செய்ய மாட்டீர்கள். மக்காவை அல்லாஹ் புணித பூமியாக ஆக்குவதற்கு முன்னரே கர்பலாவை புணிதபூமியாக ஆக்கிவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியாதா?
 (பிஹாருல் அன்வார் 33/101

ஜஃபர் கூறுகிறார்:

"அறபா தின இரவு அல்லாஹ் அறபாவில் உள்ள மக்களைப் பார்ப்பதற்கு முன்னரே கர்பலாவில் உள்ள மக்களைப் பார்த்து விடுகிறான். எப்படி என்று கேட்ட போது "அறபாவில் உள்ளவர்களில் விபச்சாரத்தில் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். கர்பலாவில் உள்ளவர்களிலோ விபச்சாரத்தில் பிறந்தவர்கள் கிடையாது என்றார்.
 (அல் ஃபைழுல் கஷ்ஷானி 2/8/2220


Post a Comment