கலீபா அபுபக்கர் (ரழி) அவர்களுக்கும் ஷீஆக்களின் ஜந்து இமாம்களுக்கமிடையில் என்ன உறவு..?? 

ஷீஆக்கள் என்றாலே ஸகாபாக்களை தூசுபவர்கள், ஏசுபவர்கள் என்பது நிதர்சனம். அதிலும் மிக மோசமாக விமர்சிக்கப்படும் ஒரு ஸகாபிதான் கலீபா அபுபக்கர் (ரழி) அவர்கள். ஷீஆ மதத்தின் பிரதான கோட்பாடு, கொள்கை அல்லது கரு இமாமத் எனும் 12 இமாம்களை கடவுள் அந்தஸ்ததில் வைத்து நோக்குவதுடன், சிறிய பெரிய தவறுகளில் இருந்து தூய்மையாக்கப்பட்டவர்கள் என்று வாதிடுவது. குறித்த அந்த 12 இமாம்களில் ஜந்து இமாம்களின் பாட்டனார் கலீபா அபுபக்கர் (ரழி)  என்பது எம்மில் எத்தனை பெயருக்குத் தெறியும்..???? எம்மில் பலருக்கு தெறியாவிட்டாலும் ஷீஆமத மோதாவிகளுக்கு தெறியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது தின்னம்.   ஆம் ஷீஆ மதத்தவர்களினால் மதிக்கப்படும், அந்த 12 இமாம்களின் பின்வரும் ஜந்து பெயர்களின் பாட்டனார் அபுபக்கர் ரழி அவர்கள். குறித்த ஜந்து இமாம்களும் அபுபக்கர் ரழி அவர்களை நித்திக்கவுமில்லை, ஏசவுமில்லை. மிக கண்ணியமாக பார்த்தார்கள். அவர்களின் பெயர்களை வைத்து இந்த ஷீஆ மதத்தினர் காட்டும் கூத்துக்கு அவர்கள் ஒரு போதும் காரணமாய் இருந்ததில்லை.


அந்த ஜந்து இமாம்மனின்  பெயர்கள் :


01. ஜஃபர் அஸ்ஸாதிக் : ஷீஆக்களின் 6 வது இமாமாக கருதப்படுபவர். இவரின் பெயரில் ஷீஆ மதத்தினர் இட்டுக்கட்டியதை போல வேறு யாருடைய பெயரிலும் இட்டுக்கட்டி இருக்க முடியாது எனும் அளவுக்கு இவரை இழிவு செய்தவர்கள் ஷீஆக்கள்.


02.மூஸா அல்காழிம் : இவர் ஷீஆக்களின் 7வது இமாமாக கருதப்படுவர்.


03. அலி ரிழா : இவர் 8து இமாமாக கருதப்படுபவர்.


04. முகம்மத் ஜவாத் : இவர் 9து இமாமாக கருதப்படுபவர்.


05. அலி அல்காதி : இவர் 8து இமாமாக கருதப்படுபவர். 

Post a Comment