ஷரீஆவின் தக்பீர் கோட்பாட்டின் நிழலில் ஷீஆக்கள் காபிர்களா?? 

ஏன்?? எதனால்?? 

01-04-2016  

ஷீஆக்கள் பற்றிய கருத்தாடலை பெதுவாக நோக்கின், மிக பழைமையானது. இஸ்லாத்தின்  எதிர் சக்திகளின் திட்டமிட்ட நுழைவும், நகர்வும் அதன் வரலாற்றில் சில கருப்பு புள்ளிகளை தூவி மாசுபடுத்திய கசப்பான உண்மையின் பின்னனியில் தோற்றம் பெற்றதுவே  இந்த ஷீஆயிஸம். இது பற்றிய கருத்தாடல், தெளிவுட்டல், ஆய்வுகள் என ஆதாரங்களை அடியாகக் கொண்டு எமது இஸ்லாமிய அறிஞ்ச பெருமக்கள் அக்காலத்திலேயே பெரும் சேவை செய்தனர். செய்து கொண்டே இருக்கின்றனர். (அல்லாஹ் அவர்களை பெருந்திக் கொள்வானாக).

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பிரிவுகளில் மிக மேசமான பிரிவாக அன்றும், இன்றும் அடையாளிக்கப்படும் ஷீஆயிஸத்தின் வரலாறு பற்றிய தெளிவு, புரிதல், உண்மை நிலை எமது ஈமனை காக்கும் கேடையமாக மாறி விட்டது. குறிப்பாக சம காலத்தில் இஸ்லாமிய உலகிலும் சரி எமது தேசியத்திலும் சரி சுன்னா முஸ்லிம்கள், ஷீஆமத, வாத பிரதிவாதங்கள், மோதல்கள் மிக தீவிரமடைந்துள்ளது. ஷீஆயிஸத்தை நான்குடன் ஜந்தாவது மத்ஹபாக பார்க்கப்படுகின்றது. கிளை விவகாரங்களில் முறண்பட்ட உள்ளக இயங்கங்கள், அமைப்புக்களாக நோக்கப்படுகின்றது. மட்டுமின்றி ஈரான் எனும் ஷீஆ தேசத்தின் அமெரிக்க, இஸ்ரேல் போலி கவர்ச்சி விளப்பரங்கள் எமது இளசுகளை அபாயகரமான பாதையொன்றுக்கு அவர்கள் அறியாத நிலையில் இழுத்துச் செல்கிறது. மறுபுரத்தில் குறிப்பாக எமது தாயக களத்தில் ஷீஆயிஸ எதிர்ப் பிரச்சாரத்தின் விளைவாக ஷீஆயிஸம் குறித்த விளிப்புணர்வு, சரியான புரிதல் சமூகத்தின் ஒரு சாராரை சரியான பாதையில் பயணிக்க வழியும் செய்துள்ளது. ஷீஆ என்ற வார்த்தையை செவியுற்றால் அவர்கள் காபிர்கள் என்று சட்டென பத்வாவும் கொடுத்துவிடுகின்றனர். (ஒருவரை காபிர், முஷ்ரிக்காகுவது இன்றய தழிழ் தஃவா களத்தில் புது பெஷனாகிவிட்டது என்பது மற்றுமொறு கசப்பான விவகாரம்.) இதன் எதிர்ச் சாரார் ஷீஆக்கள் வழி தவரியவர்களே தவிற காபிர்கள் இல்லை.. காபிர்கள் என்று கூறுவதை வண்மையாக கண்டித்து  அவர்களால் தத்துவ விளக்கங்களும் சொல்லப்படுகின்றது. இவ்விரு சாராரின் கருத்துகளை உள்வாங்கும் மூன்றாம் சமூகம்  இயல்பாகவே நிலை குழம்பிய சம்பவங்களும் நிகழ்ந்தேறுகிறது. எனவே ஷீஆயிஸம் பற்றிய ஒரு உண்மை முஸ்லிமின் பார்வை எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெளிவு படுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்காகும். நோக்கை அடைய ஷீஆயிஸம் பற்றிய சில அடிப்படை அம்சங்களை முதலில் கவணிப்போம்
  
வரலாற்றில் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே  நபியின் அங்கீகாரத்துடன் தோற்றம் பெற்றோம் என சில போலி ஆதாரங்களை சொல்லி வாதிடுகின்றனர் இந்த ஷீஆயிஸத்தினர்.. இவர்களின் வாதப்படி நபியின் அங்கீகாரம் கிடைத்திருந்தால் ஏன் இத்தனை குழப்பங்கள் நிகழ வேண்டும்.? அலி (ரழி) அவர்கள் நபியின் வஷீயத்தை காப்பாற்ற ஏன் போராடவில்லை?? என குறுக்கு விசாரனை செய்தால் ஷீஆயிஸம் இக்கனமே தேற்றுவிடும். மேலும் ஷீஆயிஸம் இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுதான் என்பதற்கு அவர்கள் எடுத்துயம்பும் முதல் விளக்கம் அவர்களது தோற்றம் குறித்த விடயமே. நபியின் அங்கீகாரம் பெற்ற நாங்கள் எப்படி காபிர்கள் என குதர்க்கவாதம் புரிகின்றனர். அத்துடன் ஷீஆயிஸம் பற்றி ஸுன்னி அறிஞசர்கள் ஷீஆக்கள் முஸ்லிம்கள் என பத்வா வழங்கியிருப்பதாகவும் குறிப்பாக முஹம்மது ஹஸ்ஸாலி, மஹ்மூத் ஸல்தூன், மௌலானா மௌதூதி, அப்துல் ஹலீம் மஹ்மூத், அபு ஸஹ்றா, இன்னும் அம்மான் நாட்டில் வெளியிட்ட பத்வா என பல்டியல் படலம் நீள்கிறது. (கண்டரிந்த உண்மைகள் பக் 122) ஷீஆயிஸத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் அசுரம் காணும் போது துண்டு பிரசுரங்களாக இக்கருத்துக்கள் மக்கள்மயப்படுத்தப்படுகின்றன. அஹ்லுஸ் ஸுன்னாவுக்கு நெருக்கமான சில அறிஞசர்களின் இப்பத்வாக்கள் கூட ஷீஆயிஸத்தை இஸ்லாமிய புரட்சியாக, பொது எதிரியை ஒழித்துக்கட்டுவோம், தனித்துவம் பேணுவோம் என்பன போன்ற ஏமாற்றல்களின் விளைவே தவிர வேறில்லை. இப்பத்வாக்கள். தகீயா எனும் நடிப்புக்கொள்கையில் ஷீஆ மதத்தவர்களாள் உற்படுத்தப்பட்டு ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் என்ற நப்பாசையில் திட்டமிட்டு குறித்த அறிஞசர்கள்  ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றுதான் கூற இருக்கிறது. ஷீஆயிஸத்தை சிந்தனையாக பார்ப்பதா? அல்லது குப்ரியதாக பார்ப்பதா? எனும் விடயம் வெளித்தோற்றத்தை அல்லது ஷீஆயிஸ உற்சாக  வார்த்தை வீரத்தை வைத்து நோக்கப்பட மாட்டாது. அடிப்படைகளுடன் உரசிப்பார்த்து முடிவெடுக்கப்படும். அதுதான் முறையும் கூட. அத்துடன்    இங்கு நாம் ஒரு முக்கிய விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஷரீஆவின் நிழலில் காபிர் பட்டம் கொடுப்பதென்பது அவ்வளவு சாதாரனமல்ல. ஒரு மனிதனைப் பார்த்து காபிர் என்று சொல்லுவது சாதாரன விடயமல்ல. அல்லாஹ்வின் அதிகாரத்திற்கும், அவனால் அதிகாரம் வழங்கப்பட்ட நபியவர்களுக்கும் உரித்தான விடயம். ஷரீஆவில் இதற்கென தனிப் பகுதியே உள்ளது. மார்க்க கல்வியில் துரைபோகக் கற்றோரால் மின நூணுக்கமாக, பல நிபந்தனைகளை கவணித்து வழங்கப்படுவதே இத்த குப்ர் தீர்ப்பு. இத்தீர்பு குறிப்பாக இரண்டு விடயங்களை தன்னகித்துள்ளது.

01. பொதுவான தீர்ப்பு
02. குறிப்பிட்ட தீர்ப்பு

பொதுவான தீர்ப்பை பொருத்தவரை இஸ்லாத்தின் வரையரைகள், கொள்கை கோட்பாடுகள், தனித்துவங்கள், புனித அல்குர்ஆனில் கூட்டல் குறைத்தல் என ஷரீஅத்தின் தூதை அப்படியே தலைகீழாக புரட்டி போட்ட இஸ்லாத்தின் லேபலில் நடமாடும் வழிகெட்ட பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்க முடியும். இதில் ஷீஆயிஸமும் அடங்கும். குறிப்பாக ஷீஆயிஸம் பல உற்பிரிவுகளை தன்னகித்துள்ளது. அனைத்து ஷீஆ பிரிவுக்கும் இத்தீர்ப்பு பெருந்துமா என்பதை இன்றைய நாட்களில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஷீஆயிஸ பிரிவுகள் பற்றிய சிறு குறிப்புக்களுடன் ஆய்வது காலத்தின் தேவை என கருதுகிறேன்.

1- அல் இத்னா அஷரிய்யா/அல் இமாமிய்யா : பன்னிரண்டு இமாம்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பிரிவாகும், இன்று ஷீஆக்களின் பெரும்பான்மை பிரிவும் இவர்களாகும். ஷீஆ தேசமான ஈரானின் ஆட்சி இப்பிரிவின் அடிப்படையிலேதான் காணப்படுகிறது. இவர்கள் காபிர்கள் என்பதில் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களுக்கு மத்தியில் மாற்றுக்கருத்து இல்லை.

2- அஸ் ஸைதிய்யா: ஸைத் இப்னு அலி ஸைனுல் ஆபிதீனை இமாமாக வைத்து உருவானவர்களே ஸைதிய்யாக்களாவர். அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கு நெருக்கமான ஒரு ஷீஆ பிரிவென்றால் அது இவர்கள்தான். அபுபக்கர் (ரழி), உமர் (ரழி), உத்மான் ரழி பேன்ற கலீபாக்களின் ஆட்சியை விமர்சிப்பதில்லை. இருப்பினும் அலி ரழி அவர்களே கிலாபத்திற்க வந்திருக்க வேண்டும் எனும் கொள்கையுடையவர்கள். இவர்கள் குறித்த பத்வாவில் அறிஞசர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றன. எமன், ஈராக், லெபனான் போன்ற நாடுகளின் இன்றளவும் காணப்படுகின்றனர்.

3- அல்இஸ்மாஈலிய்யா: இத்னா அஷரிய்யாக்களுக்கு அடுத்ததாக ஷீஆக்களின் பெரும்பான்மையான பிரிவு இஸ்மாஈலிய்யாக்களாவர். இந்தியா, சிரியா, எமன் போன்ற நாடுகளில் காணப்படும் இவர்கள் இஸ்மாயீல் இப்னு ஜஃபர் அஸ்ஸாதிக் என்பவரை இமாமாக வைத்து உருவானார்கள். இவர்களும் இஸ்லாத்தின் நெறியை விட்டும் நெறிதவரியவர்களாவர்.

4- அலவிய்யாக்கள்/நுஸைரிய்யாக்கள் (சிரியா): இன்று சிரியாவில் பஷர் அல் ஆஸாதின் தலைமையில் ஆட்சியிலிருப்பவர்களே அலவிய்யாக்களாவர் .சிரியாவின் மக்கள் தொகையில் வெறும் 10% விகிதத்தையே தொட்டிருக்கும் இவர்கள் சிரியா ஸுன்னா முஸ்லிம்களை அடக்கி அட்டூளியம் செய்கின்றனர். கொடுங்கோலன் பஷர் அல் ஆஸாதின் அடக்கு முறையிலிருந்து விடுதலை பெற ஸுன்னா முஸ்லிம்கள் போராடி வருகின்றனர். 1963ல் ஸோசலிச அரபியப் படையின் (البعث العربي الإشتراكي) உதவியுடன் அலவிய்யாக்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து சிரியா யுத்த வலயமாக மாறியுள்ளது. அலவிய்யாக்கள் சிரியாவில் மட்டுமல்லாது லெபனான், துர்கிஸ்த்தான், குர்திஸ்த்தான், ஈராக் போன்ற நாடுகளிலும் உள்ளனர். ஈராக், சிரியா, எமன் போன்ற நாடுகளில் ஸுன்னா முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி வருகின்றனர். இவர்களும் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள்.

5-    ஹிஸ்புல்லாஹ்(லெபனான்): 1983ல் பாரிய இனப்படுகொலைகளுடன் லெபனானில் தோற்றம் பெற்ற ஷீஆக்களின் அரசியல் இராணுவம் எனக்கூறலாம். இன்று லெபனானை பிரதி நிதித்துவப்படுத்தும் இவர்கள் லெபனானை ஈரானின் அரவணைப்புடன் முழு ஷீஆ மத நாடாக மாற்ற முயல்கின்றனர். இவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாகளின் பகிரங்க பகையாளர்களாவர்.
இப்படி இன்னும் பல ஷீஆயிஸத்தின் எச்ச சொச்சங்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பதவி வெறி, இன வித்தியாசம் என்பன போன்ற அற்ப காரனங்களுக்காக பிரிந்து கிடந்தாலும் அடிக்கொள்கையில் அணுவளவும் கருத்துமுரண்பாடு கிடையாது என்பது திண்ணம். இவர்கள் குறித்து இஸ்லாமிய அறிஞ்ச பெருமக்களில் மிகச்சிலரின் கருத்துகளை பார்ப்போம்.  

இமாம் இப்னு தைமியா (ரஹ்) தனது மின்ஹாஜுஸ் ஸுன்னா எனும் நூலில் குறிப்பிடும் போது எல்லாப் பிரிவுகளையும் விட ஷீஆக்கள் மிக கெட்டவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்களின் தலைவர்களில் அதிகமானவர்கள் ஸிந்தீக்குகள் காரணம் இஸ்லாத்தை தகர்த்தெறிவதற்கான ஓர் ஊடகமாகவே தங்களை றாபிழாக்கள் என்று இனங்காட்டிக் கொள்கின்றனர்.’’ (مجموع الفتاوى)

இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) குறிப்பிடும் போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களை ஏசுபவர்களுக்கு இஸ்லாத்தில் எந்தப்பங்கும் கிடையாது.” (السنة للخلال)

இமாம் அபு ஹனீபா (ரஹ்) குறிப்பிடும் போது யார் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகிய இருவரது கிலாபத்தையும் மறுக்கிறானோ அவன் காபிராவான்.”  (ابن حجر الهيثمي في الصواعق المحرقة)

இப்படி இஸ்லாத்தின் தூண்களாக இருந்து சத்தியத்திற்காக பணி செய்த மாமேதைகள் இச்ஷீஆயிஸத்தை காபிர்கள் என்று பகிரங்கமாக குறிப்படுகின்றனர். அறிஞசர்களின் கருத்துகளை மட்டும் குறிப்பிடுவதை விட சதாரன பாமரனும் சிந்தித்து புரிந்து கொள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் இதன் தொடரில் நோக்குவோம்.

இரண்டாவது வகையான குறிப்பிட்ட தீர்ப்பை” பொருத்தவரை மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டிய அம்சமாகும். இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் ஒரு மனிதரை பார்த்து நிராகரித்தவர் என்று தீர்பு வழங்குவது மிக கடினமான விடயம். ஷீஆயிஸ செயற்பாட்டாலர்களுக்கு குப்ர் தீர்ப்பு வழங்கும் போது ஷரீஅத்தின் தக்பீர் பற்றிய கோட்பாடுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உற்பட்டிரிக்கின்றார்களா என்பதை ஆய்வது மிக அவசியம். ஷீஆ  (தனி) செயற்பாட்டாலர்களுக்கு தீர்ப்பு வழங்கும் போது பின்வரும் நிபந்தனைகளை பெதுவாகவும் சில விடயங்களை குறிப்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிபந்தனைகள்

01. பருவ வயதை அடைந்தவராகவும், புத்தி சுயாதீனமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

02. தீர்ப்பு சுய விருப்பின் அடிப்படையில் அமையக் கூடாது. கோபம், வெறுப்பு, சந்தேகம் என சுயம் கழைந்து பெதுப்பார்வையுடன் நோக்கல் வேண்டும்.

03. இஸ்லாத்தின் தூது கிடைத்திருக்க வேண்டும். ஷீஆயிஸத்தினரை பொருத்தவரை குடும்பப்பின்னணி, அறியாமை, பெற்றோர், பொருப்பாளர்களின் அலச்சியப் போக்கு, மார்க்கக் கல்விக்கு தான் தவறுதலாக தெரிவு செய்த இடம், சூழல் என்பன போன்ற தடைகள் குறித்த நபருக்கு இருக்கும் பட்ச்சத்தில் எமது நாவு முந்தி விடக் கூடாது. அவர்களின் நிலையினை அறிந்து நிதானித்து சத்தியத்தை அதற்கே உரிய முறையில் தெளிவு படுத்தப்பட்டு அதன் பிற்பாடும் விடாப்பிடியாக இருக்கும் பட்சத்தில் தான் குப்ர் தீர்ப்பு பற்றி யோசிக்க வேண்டும். ஷீஆ போன்ற மார்க்க முரண்பாட்டாளர்களுடனே இப்படி பக்குவமாய் கையாள வேண்டுமெனில் இன்றைய எமது தஃவா களத்தில் பருவவயதடையாத சிறுவர்கலெல்லாம் முட்டி மோதி தீர்பளிக்கின்ற அவலம் தெடரத்தான் செய்கிறது.   

ஷீஆ மதத்தை காபிர்கள் என்று தீ்ர்பளிப்பதற்கான சில நியாயங்கள்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் பழமொழிக்கு ஏற்ப சில காரணங்களை மட்டும் குறிப்பிடுகிறோம்.

01. அல்குர்ஆன் விடயத்தில் ஷீஆக்கள்

புனித அல்குர்ஆனை ஷீஆக்கள் கேள்விக்கு உற்படுத்துகின்றனர். அதன் நம்பிக்கை தன்மையில் சந்தேகம் கொள்கின்றனர். அல்குர்ஆனில் ஒரு ஹர்பை (எழுத்து) ஒருவன் நிராகரித்தால் அவன் காபிராகிறான் என்றால் முழு குர்ஆனையும் சந்தேக கண்னுடன் நோக்கும் ஷீஆக்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும். குறிப்பாக தழிழ் பேசும் ஷீஆக்கள் அல்குர்ஆன் விடயத்தில் தாங்கள் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கருத்திலேதான் இருக்கின்றோம் என வாதிடுவர். அவ்வாதத்திற்கு விடைகாண அல்குர்ஆனுடைய விடயத்தில் ஷீஆக்கள் கைக்கொள்ளும் நுற்பமான தகீயாவை இரண்டு வகையாக நோக்கலாம்.

01. ஷீஆக்களில் ஒரு சாரார் புனித அல்குர்ஆன் திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அதிக வசனங்கள் திட்டமிட்டு நீங்கப்பட்டுள்ளது என்றும் தங்களிடம் முஸ்ஹபு பாத்திமா இருப்பதாகவும் வாதிடுவர்.

02. இரண்டாம் சாரார் புனித அல்குர்ஆன் முழுமையானது, அதில் மனித திரிவுகள் இல்லை. முஸ்ஹபுல் பாத்திமா என்பது வெரும் கற்பனை என்று கூறுவதுடன் புனித அல்குர்ஆனிய வசனங்களுக்கான சரியான விளக்கம், அதன் தப்ஸீர், அலி ரழி பற்றிய புகழ், இமாமியத் கோட்பாடு, அஹ்லுல் பைத் பற்றிய உண்மைகள் அலி ரழி அவர்களுக்கு மட்டுமே தெரியும் எனவே முஸ்ஹபு அலீயை பின்பற்றுவதுடன் ஊடாகவே அல்குர்ஆனிய வாழ்வு வாழ முடியும் என குறிப்பிடுவர். இதனைக் கண்டு நாம் ஏமாந்து விடக் கூடாது. முதல் சாரார் வெளிப்படையாக கூறியதை இரண்டாம் சாரார் மறைத்து ஒழித்து மக்களிடம் வழிகேட்டைப் பரப்பித் தப்பித்துக்கொள்கின்றனர்.

02.ஸாபாக்கள் விடயத்தில் ஷீஆக்கள்

ஸஹாபாக்கள் விடயத்தில் ஷீஆக்களின் கருத்து மிக ஆபத்தானது. அவர்களது நூற்களில் ஸஹாபாக்களை ஏசியும், தூசியும் வசைபாடியும் நிறப்பியுள்ளனர். குறிப்பிட்ட சிலரை தவிற மற்றைய அனைவரும் காபிர்கள் என்று வாய் கூசாமல் தூற்றுகின்றனர்.

"மிக்தாத் ரழி, அபூ தர் அல்கிப்பாரி ரழி, ஸல்மானுல் பாரிஸி ரழி ஆகியோரைத்தவிர ஏனய ஸஹாபாக்கள் முர்தத்களாகிவிட்டனர் (புரூஉல் குலைனி,115)

"நாங்கள் நபிமார்கள் , யாருக்கும் வாரிசாகமாட்டோம், நாம் விட்டுச்செல்வது ஸதகாவாகும்" என்ற ஹதீஸை அபூ பக்கர்  இட்டுக்கட்டினார் (கஷ்புல் அஸ்ரார் 112)

ஆயிஷா (ரழி), ஹப்ஸா (ரழி) போன்ற நபிகளாரின் அன்பு மனைவியர்களை மோசமாக விமர்சிக்கின்றனர். இன்றும் கூட ஷீஆ மத தேசமான ஈரானில் காஸான் எனும் பகுதியில் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களை கொலை செய்த அபு லுஃலுஆ அல்மஜுஸி எனும் நெருப்பு வணங்கியின் கபுரை அடுக்குமாடிகளாய் கட்டி உமர் (ரழி) ஸஹீதாக்கப்பட்ட நாளில் ஒவ்வெரு வருடமும் கொண்டாடுகின்றனர். இது இப்படி இருக்க தழிழ் பேசும் ஷீஆக்கள் அவர்களின் தற்போதைய ஆண்மீக தாதா அலீ காமினி ஸஹாபாக்கள் விடயத்தில் எல்லைகடப்பதை, ஏசுவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு பத்வா கொடுத்துள்ளார் எனவே நாங்கள் ஏசுவதுமில்லை, தூசுவதுமில்லை என சமூக தளங்களில் பதிவிடுகின்றனர். உத்தம தோழர்களை கொன்றவனின் கபுரை தரைமட்டமாக்காமல் போலி பத்வா கொடுத்து தகீயா நாடகமாடும் இவர்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும்.

03. அல் இஸ்மா (மனித குறைகள் அற்ற புனித நிலை)

அல் இஸ்மா என்றால் கெடுதிகளிலிருந்து பாதுகாப்பு பெறுதல் என அர்த்தமாகும் (பார்க்க : லிஸானுல் அரப் 12/404)

ஷீஆக்களிடம் இஸ்மா என்றால் "ஷீஆக்களின் இமாம் சிறிய பெரிய அனைத்து பாவங்களிலிருந்தும் தூய்மையானவர், சிறிய மறதி கூட அவருக்கு ஏற்படாது, மார்க்கத்தீர்ப்பின் விடயத்தில் எக்கட்டத்திலும் பிழையாக தீர்ப்பு வழங்க மாட்டார், மேலும் உலக காரியங்களிலிருந்து முழுமையாக விடுதலை பெற்ற ஞானியாக இருப்பார் என நம்புவதாகும்" (மீஸானுல் ஹிக்மா 1/174)

மனித நிலை தாண்டி தமது இமாம்களை அல்லாஹ்வின் நிலைக்கு கொண்டு செல்லும் பாரிய குப்ரியத்தை தனது அடிக்கொள்கையாக நெஞ்சில் சுமந்து விசுவாசிக்கும் இச்ஷீஆயிஸத்தை எப்படி முஸ்லீம்கள் என்று கூற முடியும்?

மேற்குறிப்பிட்ட காரணங்கள் மிகச்சில துளிகளே. ஷீஆயிஸத்தை குப்ருக்கு தள்ளிய காரணங்களை தொகுத்தால் ஒரு கும்பக்கணக்கில் எழுதலாம். சுருக்கம் கருதி மேற்குறிப்பிட்ட காரணங்களுடன் சுருக்கமாக இன்னும் சில காரணங்களை இவ்வாக்கத்தின் நிறைவுப் பகுதியாய் அமைகிறது.

-    தகீயா எனும் நடிப்புக் கொள்கை

-    முத்ஆ எனும் பகிரங்க விபச்சாரம்

-    அர் ரஜ்ஆ எனும் இமாம்களின் மீள் பிரவி கொள்கை

-   "அல் ழுஹூர், அல் பதாஉ" எனும் மறைந்த பின் மீண்டும் தோன்றும் கொள்கை

-    அத் தீனீயா எனும் மண்பற்று, மண் புனிதத்துவக் கொள்கை
-    கபுர் வணக்கம்

-    மறைந்திருக்கும் மஹ்தி நாடகம்

-    முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

இப்படி காரணங்களை வகைதொகையின்றி அடிக்கிக்கொண்டே போகலாம். இன்னும் அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களாகிய எம்மீது ஷீஆக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பொருத்தவரை மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது. இப்புவிப் பந்தில் வாழ்ந்த சிறந்த சமூகமான நபித் தோழர்கள் குறித்தே அஞ்சாது, ஏசியும், தூசியும், இழிப்பழியும் செய்த ஷீஆ மதத்தின் பிற்பட்ட காலங்களில் வாழ்ந்த, வாழுகின்ற முஸ்லிம்கள் விடயத்தில் அவர்களது எவளவு அசிங்கமாக இருக்கும் என்பதை பின்வருமாறு சுருக்கி நோக்குவேம்.

அஹ்லுஸ் ஸுன்னாக்கள் குறித்து ஷீஆமதத்தினரில் நம்பிங்கைகள்

-    காபிர்கள்

-    அசுத்தமானவர்கள்

-    பிறப்பால் மோசமானவர்கள்

-    அஹ்லுல் பைத்தின் எதிரிகள், சாபத்துக்கு உரியவர்கள்

-    அவர்களுக்கு பின் நின்று தொழுவது ஹராம்

-    கொலை செய்வதற்கு மிகத் தகுதியானவர்கள்

-    மிருகங்களுக்கு ஒப்பானவர்கள் (குரங்கு, பன்றி)

- அவர்களது பள்ளிவாயல்களை உடைக்களாம், சொத்துக்களை சூரையாடளாம்

உண்மை முஸ்லிம்கள் மீது அவதூறும், பழியும் பேடுகின்றனர். இதுவே ஷீஆ மதத்தவர்களின் வரலாற்று சாதனை. எமது அஹ்லுஸ் ஸுன்னா அறிஞசர்களே இவர்கள் விடயத்தில் நிதானித்து பலத்த ஆய்வு, நிபந்தனைகள் என எல்லாவற்றையும் ஆய்ந்து ஹிதாயத்தின் பக்கம் அழைப்பும் விடுத்து அதையும் நிராகரிக்கும் பட்ச்சத்தில் இறுதி கட்டமாகவே இத்தீரப்பு வழங்கங்குகிறார்கள். எனவோதான் ஷீஆ மத்ததிற்கு எதிரான பிரச்சாரங்கள் சூடு பிடித்திருக்கும் இக்காலகட்டத்தில் ஷீஆ என்று அடையாளிக்கப்படும் குறித்த நபர்கள் விடயத்தில் அவர்களது நிலைகளை ஆராய்ந்து சத்தியத்தை எடுத்துரைத்து அவர்களையும் இப்புனித மார்க்கத்தில் இணைத்துக் கொள்வதே எமது முயற்சியும், நோக்கமுமாகும். ஷீஆக்களுக்கும் ஹிதாயத் எனும் நேர்வழியை கொடுப்பாயாக!! என்பதுவே எமது பிராத்தனை. அல்லாஹ் அஃலம்.

Post a Comment