ஓட்டமாவடியில் ஷீஆக்களுக்கு எதிராக பத்து தீர்மானங்கள் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நிறைவேற்றம் – ஷீஆக்களின் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி.

(தொகுப்பு – ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தின் மீராவோடை கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மன்பஊல் ஹூதா அறபு கல்லூரி ஷீஆக்கொள்கையினை பகிரங்கமாக பிரச்சாரம் செய்து வருவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளையும்,பிரதேச பள்ளிவாயல் நிருவாகத்தினரும் குறிப்பாக மீராவோடை கிராமத்தின் மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாகமும் குற்றம் சுமர்த்தி அதனை நிரூபித்துள்ளது.

இந்நிலையில் கல்குடா பிரதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் ஷீஆக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளையும்,ஏனைய தஃவா அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்றது.

வாராந்தம் நடை பெறுகின்ற வெள்ளி மேடைகளிலும் வழி கெட்ட ஷீஆக்களுக்கு எதிரான பிரச்சாரங்களேயே அனைத்து பள்ளிவாயல்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதற்கிடையில் இலங்கையில் குறிப்பாக ஷீஆக் கொள்கை வேரூன்றி வளர்வதற்கு காரணமாக இருத்தவர் என்று அழைக்கப்பட்டு வரும் மன்பஊல் ஹூதா அறபு கல்லூரியின் அதிபர் மௌலவி இஸ்ஹாக் அவர்கள் தமது அறபு கல்லூரி அஹ்லு சுன்னா வல்ஜமாஆத் கோட்பாட்டில் தான் இன்று வரை இயங்கி வருவதாக ஒரு கானொலி ஊடக குறிப்பிட்டு இருத்தார்.
ஆனால் இதற்கிடையில் அங்கு கற்பிக்கும் உலமாக்கள்,மன்பஊல் ஹூதா அறபு கல்லூரியில் இருந்து மௌலவி பட்டம் பெற்று வெளியான உலமாக்கள் தாங்கள் ஷீஆக்கள் தான் என்று உறுதியாக மக்கள் மன்றத்தின் முன்னிலையில் தம்மை அடையாளம் காட்டி வருகின்றனர்.

இவ்விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்ட அப்பிரதேசத்தின் மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளி வாயல் நிருவாகம்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளை மற்றும் ஏனைய தஃவா அமைப்புக்கள் ஒன்றினைத்து இஸ்லாத்தின் விரோதியான வழிகெட்ட ஷீஆ விசமிகளுக்கு எதிராக மாபெரும் இஸ்லாமிய சன்மார்க்க மா நாடு ஒன்றினை நேற்று வெள்ளிக்கிழமை (08.01.2015) நடாத்தினர்.

இதில் பிரதேசத்தின் முக்கிய உலமாக்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள்,கல்விமான்கள்,பொது மக்கள் ஷீஆக்களின் வழி கெட்டு குறிந்து அவதானத்துடன் இருக்குமாறு கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக கல்குடா பிரதேசத்தின் ஷீஆக்களின் தலைவர் என அழைக்கப்படும் மன்பஊல் ஹூதா அறபு கல்லூரியின் அதிபர் இஸ்ஹாக் மௌலவி அவர்களின் சகோதரர் ஜவ்பர் மௌலவி அவர்கள் உரையாற்றினார் “அவர் தமது உரையின் போது வழி கெட்ட ஷீஆக்கள் தொடர்பாகவும் தாம் கடந்து வந்த பாதைகளில் ஷீஆக்களின் விஷம தனமா போக்கு குறிந்தும் அதில் இருத்து தாம் மீண்டுள்ளதுடன் ஏனைய ஷீஆக்களையும் இஸ்லாத்தின் பால் மீண்டு வருமாறு அழைப்பு விடுத்தார்.


இம் மாநாட்டின் போது அஹ்லு சுன்னா வல்ஜமாஆத்தின் கொள்கையின் கீழ் உள்ள தப்லீக்,தௌஹீத்,ஜமாஆத்தே இஸ்லாமி,இஹ்வான்கள் என இஸ்லாமிய ஷரீஆவை ஏற்றுள்ள அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமை பட்டு இஸ்லாத்தின் பொது எதிரியான ஷீஆக்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளையின் வழிகாட்டலில் மாநாட்டில் கலந்து கொண்டிருத்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் முன்னிலையில் மாநாட்டின் இறுதி பத்து (10) தீர்மானங்கள் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் தாஹிர் மௌலவி அவர்கள் வாசித்தார்கள் அதனை ஏக மனதாக மக்கள் அல்லாஹூ அக்பர்… அல்லாஹூ அக்பர்… அல்லாஹ் மிகப்பெரியவன் என்று உரந்த குரலில் சத்தம்மிட்டு கூறி அதற்கான அங்கீகாரத்தை வழங்கினர்.
இத்தீர்மானம் அனைத்தையும் கல்குடா வாழ் முஸ்லிம்கள் அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளை கேட்டுக்கொள்கின்றது.

தீர்மானங்கள்
****************

01.ஷீஆக்கள் வழங்கும் உதவிகள்,தொழில் பயிற்சிகள்,கல்வி வழிகாட்டல்கள் முஸ்லிம்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

02.மன்பஊல் ஹூதா அறபு கல்லூரி ஷீஆக்கொள்கையில் இருத்து சுத்தப்படுத்தப்பட்டு தூய்மையான இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் நிருவகிக்கப்படும் நிலை உருவாக்கப்படும் வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

03.இப்பிரதேசத்தில் வாழும் ஷீஆக்கொள்கையுடையோர் தமது கொள்கைகளை விட்டு தூய்மையான இஸ்லாமிய கொள்கையின் பால் வரவேண்டும் என இம் மாநாடு பகிரங்க அழைப்பு விடுக்கின்றது.

04.நமது பிரதேச முஸ்லிம் பாடசாலைகளில் கடமை புரியும் ஷீஆ கொள்கையை சார்ந்த ஆசிரியர்கள் பிற மதத்தவர்களின் பாடசாலைகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

05.அஹ்லு சுன்னா வல் ஜமாஆத் ஆகிய முஸ்லிம்களாகிய நாம் ஷீஆக்கொள்கையுடைவர்களுடன் திருமன உறவுகளை வைத்துக்கொள்வதனை முற்றாக தவிர்த்து கொள்ளவேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

06. ஷீஆக் கொள்கையை போதிக்கும் மீராவோடை மன்பஊல் ஹூதா அறபு கல்லூரியிலும்,பொலனறுவை முஸ்லிம் கொளனியில் உள்ள சைனபியா மகளிர் அறபு கல்லூரியில் கல்வி கற்கும் எமது பிரதேச மாணவ,மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் உடனடியாக அங்கி இருத்து விலகி அஹ்லு சுன்னா வல் ஜமாஆத் கொள்கை சார்த்த மதரஸாக்களில் சேர்ப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏனைய பிரதேச முஸ்லிம்களும் இதனை கடைபிடிக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

07. ஷீஆக்கொள்கை பிரச்சினை மீராவோடை மக்களின் பிரச்சினை மாத்திரம் அல்ல அது இப் பிரதேசத்தினதும் இந்நாட்டு முஸ்லிம்களினதும் பிரச்சினையாகும். எனவே அவற்றினை ஒழிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் வழங்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

08. மீராவோடையில் உள்ள கொமைனி வீதியின் பெயர் மாற்றப்பட வேண்டும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எடுக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

09.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளை மற்றும் மீராவோடை பள்ளி வாயல் நிருவாகம் இனைத்து ஒரு குறிப்பிட்ட கால எல்லையை ஷீஆ கொள்கையை சார்ந்தவர்களுக்கு வழங்கும் அக்கால எல்லைக்குள் அவர்கள் பகிரங்கமாக தங்களை நாங்கள் ஷீஆ கொள்கையில் இருத்து விலகி கொள்கின்றோம் என்று அவர்கள்கள் வாழும் பிரதேச பள்ளிவாயல்களில் மக்கள் மன்றத்தின் முன்னிலையில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க முன்வரவில்லை என்றால் அவர்களுடைய ஜனாஸாக்களையும்,அவர்களது குடும்ப உறவினர்களது ஜனாஸாக்களையும் அஹ்லு சுன்னதுல் வல் ஜமாஆத்தினரின் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இம் மாநாடு இத் தீர்மானத்தினை நிறைவேற்றுகின்றது. இதனை அனைத்து பிரதேச பள்ளிவாயல் நிருவாகத்தினர்களும் நடைமுறைபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை கேட்டுக்கொள்கின்றது.

10.ஷீஆக்களினால் நடாத்தப்படுகின்ற விழாக்கள்,கூட்டங்கள் மாநாடுகள் என்பவற்றை மீராவோடை மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளதால் அதனைப்போன்று கல்குடா பிரதேச வாழ் அனைத்து முஸ்லிம்களும் ஏனைய பிரதேச முஸ்லிம்களும் புறக்கணிகவேண்டும் எனவும் அங்கு கல்வி கற்பிக்கும் சுன்னதுல் வல்ஜமாஆத்தினராக தம்மை அடையாளப்படுத்துகின்ற உலமாக்கள்,ஆசிரியர்கள் தமது சொற்ப லாபங்களை கைவிட்டு விட்டு அங்கிருத்து உடனடியாக வெளியேறி ஷீஆக்களுக்கு எதிரான போராட்டத்தில் இனைத்து கொள்ளுமாறு இம் மாநாடு அழைப்பு விடுக்கின்றது.

நன்றி : நியுசிலோன் இணையம். www.Newceylon

Post a Comment