நேர்காணலில் கானலாய்ப் போன தகிய்யா சிந்தனை.

மௌலவி இஸ்ஹாகின் நேர்காணல் ஒரு பார்வை.கடந்த இருதினங்களுக்கு முன்பாக மீராவோடையில் அமைந்துள்ள மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரியின் அதிபர் இஸ்ஹாக் என்பவருடனான நேர்காணலை இணையங்களில் பார்க்கக் கிடைத்தது. முரண்பாட்டு சிந்தனையினதும், அசத்தியத்தினதும் மொத்த வடிவமான ஷீஆ சிந்தனை தமது கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது என்பதனை மறைக்க அவர் செய்ய பிரயத்தனங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்கின்றன.

செய்தியாளர் கேட்ட சில கேள்விகள் உண்மையை வெளியுலகிற்குக் கொண்டுவர உதவினாலும் இலங்கை ஷீஆவின் ஆசான் இஸ்ஹாகிடம் ஷீஆ குறித்த ஒரு கேள்வியைக் கேட்டிருந்தால் அதாவது, ஷீஆக்கள் விடயத்தில் அவரது நிலைப்பாட்டை வினவி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். அத்தோடு, ஈரான் குறித்த அவரது வினா மிகவும் பாராட்டத்தக்கது.

இலங்கை நாட்டிலே இல்லாமல் இருந்த ஒரு முஸீபத் குறித்த அறபுக் கல்லூரியின் உருவாக்கத்தின் பின்னால் பேசு பொருளாக்கப்பட்டதும், இலங்கையில் எத்தனையோ அரபுக் கல்லூரிகள் இருக்க இங்கிருந்து வெளியாகும் மாணவர்கள் மட்டுமே ஷீஆவையும், ஈரானையும் ஆதரிப்பதும் குறித்த கல்லூரி ஷீஆ சிந்தனை சார்ந்தது என்பதற்குப் போதுமான சான்றுகளாகும்.

அதிபர் இஸ்ஹாக் தனது நேர்காணலில் ஈரான் குறித்துப் பேசுகையில் உணர்வு பூர்வமாக அணுகியதை அவதானிக்க முடிந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹிஜாபை முழுமையாக அமுல்படுத்துகின்ற நாடு என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவரால் முன்வைக்கப்பட்டன.

உண்மையில், ஷீஆக்களின் மிகப் பெரும் யுக்கியான "ஈரானை ஹீரோவாக்குதல்" என்பதை கண கச்சிதமாக இஸ்ஹாக் நகர்த்திச் செல்கின்றார். ஈரான் என்ற நாட்டைப் பொருத்த வரை அதை இஸ்லாமியக் குடியரசு என்பது மிகப் பெரும் அபத்தமாகும். அது ஷீஆக்களுக்கான அரசு. உலகலாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான, முஸ்லிம்களை அழிப்பதையே இலக்காகக் கொண்ட ஒரு அரசுதான் ஈரானிய அரசு.

இன்று சர்வதேச ரீதியில் இஸ்லாமிய நாடுகளில் அப்பாவி முஸ்லிம்கள் அழிக்கப்படுவதன் பின்னால் ஈரானின் கறைபடிந்த கரம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. சிரியாவாக இருக்கலாம். யமனாக இருக்கலாம். ஆபிரிக்க நாடுகளாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அங்கு நடைபெரும் போராட்டங்களின் பின்னணியில் ஈரான் என்ற அசிங்கம் இருக்கத்தான் செய்கிறது.

ஈரான் ஒரு அரசுக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ உதவி செய்கிறது என்றால் அதன் பின்னால் இரண்டில் ஒரு காரணமே இருக்கும் என்பதை வரலாற்றை ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். ஒன்று, அகன்ற பாரசீகம் என்ற கனவை நனவாக்குதல்.  இதற்கு யமன், சிரியா யுத்தங்கள் போதுமான சான்றுகளாகும். அண்மையில் அக்சாவை மீட்க ஈரான் ஒத்திகைப் போர் என்ற தலைப்பில் ஊடகங்களில் செய்தியொன்று வெளிவந்தது. அதன் இறுதியில் அக்சாவின் மேலே ஈரானின் கொடி பறக்க விடப்பட்டது. பலஸ்தீனை மீட்டால் பலஸ்தீன் கொடியைத் தான் பறக்க விட வேண்டும். ஈரான் கொடி ஏன் வந்தது என்ற வினாவை எழுப்பிப் பார்த்தால் பலஸ்தீனை மீட்பதை விட தமது அகன்ற பாரசீகத்தை நிலைநாட்டத்தான் இத்தனை முயற்சிகளும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈரானின் உதவிகளுக்குப் பின்னால் உள்ள இரண்டாவது காரணம், ஷீஆக் கொள்கையைப் பரப்புதல்.  முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற, அதிகாரத்தின் மூலம் பரப்புதல் கடினம் என்று கருதுகின்ற நாடுகளில் தமது ஷீஆ விஷக் கிருமிகளை உதவி செய்தல் என்ற போர்வையில் பரப்புவதை அவதானிக்க முடியும். இந்த வகைக்குள் மாட்டிக் கொண்டது தான் இந்த மன்பஉல் ஹுதா???  என்ற அரபுக் கல்லூரியும். இலங்கையில் எத்தனையோ அரபுக் கல்லூரிகள் இருக்க விரல் விட்டு எண்ணக் கூடிய சில கல்லூரிகளுக்கு மட்டுமே ஈரானிய உதவி கிடைக்கிறது என்றால்  அதுவும் அக் கல்லூரிகள் ஷீஆ விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அங்கிருந்து வெளியேறுபவர்கள் அனைவருமோ அல்லது பெரும்பாலானவர்களோ ஷீஆக்களாக இருக்கிறார்கள் என்றால் ஈரானின் உதவிகளின் பின்னால் ஷீஆயிஸம் என்ற நிகழ்ச்சி நிரல் உண்டு என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

வரலாறு இப்படி இருக்க ஈரானையே போற்றிக் கொண்டு, இதயத்தில் மட்டுமல்லாது ஜன்னலின் கிரில்களில் கூட ஈரானின் இலச்சினையைப் பதித்துள்ள இவர்கள் ஷீஆக்கள் இல்லை என்று என்ன அழகாகப் பொய் சொல்கிறார்கள் என்பது எமக்கு ஆச்சரியமளிக்கிறது.

அத்தோடு, மீண்டும் மீண்டும் ஒன்றை உரத்துச் சொல்வதால் அது உண்மையாகிவிடும் என்ற எண்ணத்தில் இஸ்ஹாக் அவர்கள் எங்கள் மத்ரஸா ஷீஆக் கொள்கையைப் போதிக்கவில்லை என்றும் நாங்கள் ஷாபி மத்ஹபின் அடிப்படையில் தான் பாடங்களை நடாத்துகிறோம் என்றும் அடிக்கடி குறிப்பிடுகின்றார். அவரிடம் இந்த வினாக்களுக்கும் விடை சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

மௌலவி!  இஸ்ஹாக் அவர்களே,!!!!!!!

01. உங்கள் மத்ரஸா அஹ்லுஸ் ஸுன்னா அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தால் எதற்காக ஷீஆக்களால் மட்டுமே அனுஷ்டிக்கப்படும் "கர்பலா தினம் " உங்கள் மத்ரஸாவிலும் அனுஷ்டிக்கப்பட வேண்டும்...???

02. உங்கள் மத்ரஸாவால் ஷீஆக்கள் பிரகடப்படுத்தி தங்களை அறிமுகம் செய்ய பயன்படுத்தும் "குத்ஸ் தினம்" ஏன் அனுஷ்டிக்கப்பட வேண்டும்...???

03. ஷீஆக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு ஓதப்படும் "துஆவுல் குமைல் " போன்ற துஆக்கள் உங்கள் கல்லூரியிலும், பாலைநகரில் அமைந்துள்ள உங்கள் வாசஸ்தளங்களிலும் ஓதப்படுகிறதே. இது தான் நீங்கள் சொல்லும் அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கையா...???

04. அது ஏன் உங்கள் கல்லூரி மாணவர்களால் மட்டும் குறித்த இரவுகளில் ஷீஆக்கள் சொல்வதைப் போன்று "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலி முஹம்மத் " என்ற ஸஹாபாக்களைச் சேர்க்காத ஸலவாத்துச் சொல்லப்பட வேண்டும்...??? இந்த ஸலவாத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னாக்களின் நூற்களில் ஆதாரம் காட்ட முடியுமா...???

05. உங்கள் அரபுக் கல்லூரி ஆசிரியர்கள் ஈரானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதோடு கல்குடாவில் ஷீஆக்களின் நிறுவனமாக உள்ள ICC யை நிறுவகிக்கிறார்களே. இவர்களால் எப்படி அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கையைப் போதிக்க முடியும்...???

06. ஷாபி மத்ஹப் அடிப்படையில் போதிக்கும் உங்கள் கல்லூரியில் நடைபெறும் இப்தார் நிகவுகளிலும், உங்கள் மாணவர்கள் கலந்து கொள்ளும் இப்தாகளிலும் மஹ்ரிபின் அதான் முடிந்து இருட்டிய பிறகுதானே நோன்பு திறக்கிறார்கள் . இது ஷீஆ மத சட்டமா...??? ஷாபி மத்ஹபின் சட்டமா...???

07. ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு. ஸஹாபாக்களை மதிக்கின்ற நாடு என்றால் ஸஹாபாக்களின் பெயரை வைத்து உங்கள் தொண்டு நிறுவனத்தை இயக்காமல் ஷீஆக்களில் இமாம் என்று சொல்கின்ற ஜஃபர் ஸாதிக் (றஹ்) அவர்களின் பெயரால் ஏன் செயற்பட வேண்டும்...???

08. அதுவெல்லாம் அப்படியே இருக்க இஸ்ஹாக் அவர்களே, முதன் முதலில் இலங்கையில் ஷீஆ விஷத்துக்கு வக்காளத்து வாங்கிய, அதற்காகப் போராடிய, அந்தக் கொள்கையைப் பேசு பொருளாக ஆக்கிய நீங்கள் அதிபராக இருக்கின்ற ஒரு கல்லூரி, உங்களின் நிறுவாகத்தின் கீழுள்ள ஒரு இடம் அதனை நீங்கள் கொண்டுள்ள கொள்கைக்கு மாற்றமாக வழிநடாத்துகிறீர்கள் என்று சொன்னால் அதை நம்புவதற்கு கல்குடா மக்கள் என்ன கேனையர்களா...??? ஏன் இப்படிப் பொய் பேசுகிறீர்கள்...??? ஒரு கொள்கையைப் பகிரங்கமாகச் சொல்ல வக்கில்லாத உங்களுக்கெல்லாம் எதற்குத்தான் இந்தப் பொளப்பு...???

09. மத்ரஸா ஷீஆக் கொள்கையில் இல்லை என்றுதானே உங்களால் சொல்ல முடிகிறது. நீங்கள் ஷீஆ இல்லை என்று பகிரங்கமாக மக்கள் மன்றில் அறிவிக்கவும், மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் நீங்கள் தயாரா...???

10. ஷீஆக் கொள்கையை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றால், அது தவறானது என்றும் அதனை மத்ரஸாவில் போதிக்க முடியாது என்றும் நீங்கள் ஒப்புக் கொண்டால் முழுக்க முழுக்க ஷீஆக் கொள்கையைக் கொண்ட நாடான, முஸ்லிம்களைக் கருவறுக்கத் துடிக்கும் நாடான ஈரானின் உதவியை மட்டும் ஏன் நீங்கள் நாடுகிறீர்கள்...??? அவர்களின் இடங்களில் ஏன் பணியாற்றுகிறீர்கள்...??? இதிலிருந்தே உங்கள் நேர்காணலில் சொன்னவை அனைத்துமே அப்பட்டமான பொய்கள் என்பது புலனாகவில்லையா...???

தகிய்யா எனும் கோட்பாட்டால் சத்தியத்தை மறைக்க முற்பட்ட இஸ்ஹாக் அவர்களே தமது முரண்பட்ட கருத்துக்களால் கானலாகிப் போனார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாய் தெளிவாகி விட்டது.

"அல்லாஹ்வின் தீபத்தை தமது வாய்களால் ஊதி அணைத்து விட முயற்சிக்கிறார்கள். நிராகரிப்பாளர்கள் வெறுத்தாளும் அல்லாஹ் அதனை பரிபூரணப்படுத்தியே தீருவான் " (அல்குர்ஆன்)

ஆக்கம் : அபூ அத்துர் ரஹ்மான்.
16-12-2015

Post a Comment