ஷீஆக்களே உங்களைத் தான்...
என் கேள்விகளுக்கு உங்களால் முடியுமானால், கொள்கையில் உண்மையாளர்களாக இருந்தால், சத்தியவான்களாக இருந்தால் மழுப்பல் இன்றி தெளிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஆதார நூற்களில் இருந்து எனக்கு பதில் தாருங்கள். இன்றோடு ஷீஆ எதிர்ப்புப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

1. நீங்கள் அஹ்லுல் பைத்தினர் தான் இமாமத்திற்குத் தகுதியானவர்கள் என்கிறீர்கள். அதற்கென சில நபிமொழிகளையும் காட்டுகிறீர்கள். அந்த நபிமொழிகளை உங்களை விடவும் அதே காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்கள் தான் மிகவும் நன்கு விளச்கி இருப்பர். அது ஒரு புறம் இருக்கட்டும். உங்களின் முதல் இமாமும் எங்களது நான்காவது கலீபாவுமான அலி (ரழி) அவர்கள் அவர்களது வாழ்வில் என்றாவது ஒருநாள் "நான் தான் இறைத் தூதரால் நியமிக்கப்பட்ட இமாம். என்னைத் தான் பின்பற்றுங்கள். எனக்கு பைஅத் செய்யுங்கள் " என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்ததை ஒப்புக் கொள்ளப்பட்ட ஆதார நூற்களில் இருந்து உங்களால் காட்ட முடியுமா...???

2. அலி (ரழி) அவர்களுக்குப் பின்னர் வந்த நீங்கள் குறிப்பிடும் 11 இமாம்களில் வேறு யாராவது தனது காலத்தில் தன்னை இமாம் என்றும், பாவமற்ற புனித ஆத்மா என்றும் அறிமுகப்படுத்தினார்கள் என்று ஏற்றுக் கொள்ளத்தக்க, இட்டுக் கட்டப்படாத ஒரு ஆதாரத்தையாவது உங்களால் முன்வைக்க முடியுமா...???

இன்னும் கேள்விகள் இருக்கின்றன. தயவுசெய்து இவை இரண்டிற்குமாவது மூடர்கள் போல வேறு எதையும் உளறாமல் நேரடியான வார்த்தைகளில் பதில் தாருங்கள். பதில் தர துப்பில்லை என்றால் கேடுகெட்ட ஷீஆக் கொள்கையை தூக்கி எறிந்து விட்டுதூய இஸ்லாமிய அகீதாவின் பால் வாருங்கள். உங்கள் வரவால் கண்ணியம் பெறப் போவது இஸ்லாமல்ல. உங்கள் மறுமை வாழ்வுதான்.


Post a Comment