ஷீஆக்கள் பற்றிய விழிப்புணர்வு : ஒர் இரு அமைப்பிற்குத் தான் கடமையா...!!!

கல்குடாவில் ஷீஆக்களின் பரம்பல் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலமும் இன்னும் பல வழிகளிலும் தமது வலிகளையும் வேதனைகளையும் எமது ஈமானிய உறவுகள் வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக அக்கறையுள்ள, மார்க்கத் தெளிவுள்ள அதே நேரம் மார்க்கத்தைத் துறை போகக் கற்காத எத்தனையோ வாலிபர்கள் ஷீஆக்களின் சீர்கேடான கொள்கை குறித்தும் அவர்களால் முன்வைக்கப்படும் மூடத் தனமான வாதங்கள் குறித்தும் தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் எழுதிக் கொண்டிருக்கையில் ஈமானிய உழைப்புச் செய்கிறோம் என்று காலமெல்லாம் சொல்லிக் கொள்ளும் அமைப்பினரும், இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டத் துடிப்போரும் கல்குடாவில் வாழ்ந்து கொண்டே அசமந்தமாக இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

தஃவா என்பது சிக்கல்கள் இன்றி, வியர்வை இன்றி, விமர்சனங்கள் இன்றி, சுட்டிக் காட்டுதல்கள் இன்றி வெறுமனே தமது குகைக்குள் இருந்து கொண்டு திட்டமிடுவது என்ற அனுகுமுறையினை இந்த அமைப்புக்கள் எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என யூகிக்க முடியவில்லை. ஒரு அசத்தியம் அதன் கோர முகத்தைக் காட்டி சமூகத்தின் ஈமானைக் கீறிக் கிழித்துக் கொண்டிருக்க பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி பேசாமல் இருக்கின்ற தஃவா என்பது அல்லாஹ்விடத்தில் என்ன பெறுமானத்தைத் தரப் போகிறது என்பதைச் சிந்திக்க இவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு அசத்தியம் பகிரங்கமாக சமூக மயப்படுத்தப்படும் போது அதன் தாக்கம் குறித்தும் பகிரங்கமாகவே பேசப்பட வேண்டும். அசத்தியவாதிகள் அதுவும் ஷீஆக்கள் போன்ற மாசுபடிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள் எமது ஈமானை இலக்கு வைத்து பகிரங்கமாக நகர்கின்ற போது தஃவாவில் ஆர்வமுள்ள அல்லாஹ்வுக்ககாக மட்டும் தஃவா களத்தில் வாழ்கின்ற தஃவாவின் மூலம் இறை திருப்தியை மட்டும் எதிர் பார்க்கின்ற ஒவ்வொரு தாஇயும் தன்னால் முடியுமான அளவு பகிரங்கமாக களத்தில் இறங்க வேண்டும்.

வாழ்வும் மரணமும் அல்லாஹ்வுக்கானது என்பது தான் ஒரு இறை விசுவாசியின் தாரக மந்திரம். அசத்தியம் மேலோங்கும் போது அது அவனது நாடி நரம்பெங்கும் புகுந்து ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்த தாரக மந்திரம் தான் ஸஹாபா சமூகத்திடம் இரண்டரக் கலந்திருந்தது. அதனால் தான் முதல் இரவு முடித்த பின்பு குளிக்காமலே யுத்த களம் செல்லவும், உஹது மலையில் இருந்து சுவனத்து வாசத்தை நுகரவும், சுவனம் வேண்டும் என்ற ஆசையில் சல்லடையாகும் வரைப் போராடி ஷஹீதாகவும் அவர்களால் முடிந்தது.

ஆனால், இன்றைய தாஇக்கள் சமூகத்தைப் பயந்து தஃவாச் செய்கின்றனர். அல்லாஹ்வைப் பயப்பட வேண்டிய கட்டங்களில் தத்துவங்கள் பேசி சாமாளிக்கின்றனர். கல்குடாவில் இயங்குகின்ற தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் இது விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

உங்களது பிரதேசத்தில் ஷீஆக்கள் பகிரங்கமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்க அவர்களை எதிர்க்கின்ற அல்லது அவர்கள் குறித்துத் தெளிவுபடுத்துகின்ற முழுப் பொறுப்பும் தௌஹீத் ஜமாஅத்தினது வேலை என நீங்கள் மௌனமாக இருந்து விட முடியாது. ஷீஆக்களின் முன்னெடுப்புக்கள் பகிரங்கமாக இருக்கும் போது உங்கள் பிரச்சாரங்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். தஃவா அமைப்புக்களாக இருந்து கொண்டு ஈமானைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் கூட உங்களால் இறங்க முடியா விட்டால் உங்கள் ஈமானிய தரத்தை நீங்களே எடை போட்டுக் கொள்ளுங்கள்.

ஷீஆக் காபிர்களை சத்தியத்தை நோக்கி அழைத்தல் என்பது குறித்த ஒரு அமைப்பின் பணி மட்டுமல்ல. இன்று அது கல்குடா சமூகத்தின் கடமையாக பரிணாமம் பெற்றுள்ளது. அந்தக் கடமையை எல்லோரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். இன்னைய தினம் கல்குடா தௌஹீத் ஜமாஅத்தினர் ஷீஆக்கள் குறித்த விளிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இதனை ஆரம்பம் செய்து வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களது முயற்சிகளைப் பொருந்திக் கொள்ள வேண்டும்.

இதனை அவர்களுக்குரிய பணியாக மட்டும் விட்டுவிடாமல் இயக்கம் வளர்க்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கி மார்க்கம் வளர்க்கும் முயற்சியில் தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி போன்றோரும் செயற்பட வேண்டும். ஷீஆக்கள் பகிரங்க விரோதிகள் என்பது மிம்பர் மேடைகளில் மட்டுமல்ல சன நடமாட்டம் மிக்க எல்லா இடங்களிலும் உரத்துச் சொல்லப்பட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் பெயரால் நாம் வேண்டிக் கொள்ளும் ஒரே ஒரு அம்சமாகும்.

ஆசிரியர்
தமிழ் சுன்னா இணையம்
24.10.2015


Post a Comment