ஈரானின் மறுமுகம்


ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது வருடாந்த அறிக்கையில் ஈரானில் இடம் பெறும் கண்மூடித்தனமான துக்குத் தண்டனைகள், சட்டவிரோத கைதுகள், நேர்மையற்ற நீதி மன்றங்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் மீது பிரயோகிக்கப் படும் அடக்குமுறைகள் வழக்கறிஞர்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள், பத்திரிகையாளர்கள் வெளியேற்றம், எதிர்க் கட்சியை ஒடுக்கல் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனது கலக்கத்தை தெரிவித்தார்.
இவ்வறிக்கை எதிர்க் கட்சியைச் சேர்ந்த அறபு இன மக்கள் குறிப்பாக "அஹ்வாஸ்" மக்களுக்கெதிராக செயற்படுத்தப்பட்ட தூக்குத் தண்டனைகள் குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.

பான் கி மூன் மேலும் தனது அறிக்கையில் ஐ. நா. சபையும் அதன் பொதுச் செயலாளரும் கடந்த ஆண்டு ஈரானுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்த போதிலும் ஈரான் தொடந்தும் மனித உரிமைகளை குறிப்பாக பெண்னுரிமை பத்திரிகையாளர் உரிமை ஆர்வலர்கள் உரிமைகளை வெளிப்படையாகவே மீறி வரும் தனது போக்கை கடைப் பிடித்து வருவதாக சுட்டிக் காட்டினார்.

மேலும் பதினெட்டு வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட மரன தன்டனைகளையும் பகிரங்க தண்டனைகளையும் குறித்துக் காட்டினார்.

2010 ஆம், 2011 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைகள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதையும் இவ்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

பதினெட்டு வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு மரன தண்டனை விதிப்பது உட்பட தான் தோன்றித்தனமாக தூக்குத் தண்டனைகள் விதிப்பதை நிறுத்தும் படி மனித உரிமைகளுக்கான உயர் பணியகம் ஈரானை வேண்டிக் கொண்டதை உறுதி செய்த பொதுச் செயலாளர் ஈரானில் இடம் பெறும் தான்தோண்றித் தனமாக தூக்குத் தண்டனைகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார்.

எனினும் ஈரான் இது வரை மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணங்காமல் தனது நிலைப்பாடுகளை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எதிர்ப்பர்வர்கள் மீது மரன தண்டனையை செயற்படுத்தும் போக்கில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. பாலியல் குற்றம் என்ற பெயரில் திருமணம் ஆகாதவர்களையும் சில நேரங்களில் கல்லெறிந்து கொல்கின்றது.

உத்தியோகபூர்வ அறிக்கைகளின் படி கடந்த பெப்ரவரி மாதத்தின் தொடக்கதில் இருந்து இருபதாம் திகதி வரை மட்டும் நூற்றிநாப்பது முதல் நூற்றி என்பது பேர் வரைக்கும் தூக்குத் தண்டனை வழகியுள்ளது. 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு எட்டு மணிநேரத்திற்கும் ஒருவர் வீதம் மரன தண்டனைக்கு ஆட்பட்டுள்ளார். அரசாங்கம் அறிவித்துள்ள சில அறிக்கைகளின் படி இவ்வெண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

ஈரானிய உத்தியோக பூர்வ அறிக்கைகளை மேற் கோள் காட்டி சர்வதேச மண்ணிப்பு சபையின் அறிக்கைகள் ஈரானில் 2010ம் ஆண்டில் மட்டும் 252 பேருக்கு மரன தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றன.
அத்துடன், அரசியல் எதிர்க் கட்சியினருக்கு "ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி" என்ர பெயரில் ஈரான் செயற்படுத்தும் மரன தண்டனைகள் குறித்தும் பான் கி மூன் தனது ஆழ்ந்த கலக்கத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஈரானிடம் இருந்து பல தடவைகள் நாம் "ஆட்சிக்கெதிரன கிளர்ச்சி" எனும் குற்றச் சாட்டுக்கு உட்பட்டவர்களை மனித உரிமை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் காப்பதற்காக வேண்டி இக்குற்றச் சாட்டை வரையறை செய்யும் படி கேட்டும் அது செய்யவில்லை எனக் கூறினார்.
"ஆட்சிக்கெதிரன கிளர்ச்சி" எனும் குற்றச் சாட்டு ஆயுதங்களையும் வண்முறைகளையும் பிரயோகிப்பவர்களை உள்ளடக்கும் என ஈரான் கூறினாலும் கூட ஈரானின் உள்ளிருந்து வரும் அறிக்கைகள் இதற்கு மாற்றமாக ஆயுதம், வண்முறைகளோடு தொடர்பிலாத பெருந்துகையானோருக்கு மரன தன்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்கின்றன.

"ஆட்சிக்கெதிரன கிளர்ச்சி" எனும் குற்றச் சாட்டில் இருபது நபர்களுக்கு 2010ம் ஆண்டில் மரன தண்டனையை ஈரானிய அரசு நிறைவேற்றியுள்ளது.
"ஆட்சிக்கெதிரன கிளர்ச்சி" எனும் குற்றச் சாட்டு என்பது நடைமுறையில் இஸ்லாமியக் குடியரசை(!!!) எதிர்பதற்கான தன்டனையாக உள்ளது. இக்குற்றச்சாட்டே மரன தண்டனை விதிக்கும் அளவுக்குச் சென்று உரத்த குரலில் "இக் குற்றம் சாட்டப்பட்டவர் பூமியிலே குழப்பம் செய்தவர், அல்லாஹ்கும் அவன் தூதருக்கும் எதிர் பார்க்கப்படும் மஹ்திக்கும் மஹ்தியின் பிரதி நிதிக்கும் எதிராகச் செயற்பட்டார்" என்று தீர்பு வாசிக்கப்படுகின்றது. இங்கு மஹ்தியின் பிரதிநிதி எனக் குறிப்பிடப்படுவது (சீஅ மதத் தலைவன்) காமினிஇ ஆவான்.

மேலும் ஐ. நா சபையின் பொதுச் செயலாளர் பெண்களுக்கு கல்லெறிந்து மரன தண்டனை நிறைவேற்றும் முறை தொடர்பிலும் தனது கவலையை வெளியிட்டு, இவ்வாறான முறை இரு வகையான இழிவுபடுத்தலும் வெறுப்புணர்வை விதைக்க வல்லதும் எனக் கூறினார்.

இனக் குழுக்கள் மீதான ஒடுக்கு முறை


பெண்களின் அரசில் ,சமூக செயற்பாடுப் பங்களிப்பு அதிகரித்திருந்தாலும் கூட ஈரானிலே பெண்கள் ஒருவகையான அநீதிக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆட்படுவதாகவும் பெண் மற்றும் மனித உரிமைக் காப்பில் செயற்படும் பெண் அரசியல்வாதிகளுக்கெதிராக ஈரானிய அரசாங்கம் அச்சுறுத்தும் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் இவ்வறிக்கை கூறுகின்றது.

அவ்வாறே, மதரீதியான, இன ரீதியான சிறுபாண்மையினருக்கு குறிப்பாக "பஹாஇய்யா" க்களுக்கு எதிராக அரசாங்கம் கடைப்பிடிக்கும் மதரீதியான ஒடுக்கு முறைகளையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

கருத்துச் சுதந்திரம் தொடர்பில், பான் கி மூனின் அறிக்கை பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான 2011ம் ஆண்டுக்கான யுனிஸ்கோ கில்ரிமோ பரிசு பெற்ற அஹ்மத் ஸைத் ஆபாதி உட்பட சுமார் இருபத்தியேழு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சில வருடங்களாக சிறையில் தள்ளப்படுள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றது.

மேலும் இவ்வறிக்கை, ஈரானிய அரசு அறபு "அஹ்வாஸ்" இன மக்களுக்கெதிராக மேற்கொள்ளும் அடக்குமுறைகள் பற்றியும் பேசுகின்றது. 
2005
ம் ஆண்டில் இடம்பெற்ற எழுச்சியின் வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைதியாக ஆர்பாட்டம் செய்த அஹ்வாஸ் இன மக்களில் ஒரு தொகையினருக்கு மரன தன்டனை நிறைவேற்றப்பட்டது எனவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

நன்றி: அல் அறபிய்யா. நெட்
15/10/2011


Post a Comment