யூத வேர்களில் உதயமான ஷியா விருட்சம்

09-08-2015

ஷியாக்களின் கடவுள் கொள்கை

அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பி வரும் படு பயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)
...
இவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.

கலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார்.

இந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப் பட்ட (?)இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.

"மதுவைத் தடை செய்வதற் காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை'' என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது.


இதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.


அபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். "அபூஜஃபர், (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார். அது போலவே) அபூ ஜஃபர் இறந்த பின்னர் அபூ முஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், "அபூ ஹாஷிமே! மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர்

Post a Comment