சுற்றுலா சுகமும் சூடுபிடிக்கும் பிரச்சாரமும்.


அன்மைக்காலமாக இலங்கையில் ஷீஆக்களுக்கு எதிரான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஜம்இய்யதுல் உலமா தொடக்கம் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களும் ஷீஆக்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களிடமும் ஷீஆக்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறதாம். ஷீஆக்களை மோசமாகப் பார்க்கும் ஒரு நிலை மக்களிடம் உருவாகியுள்ளதாம்.
இந்தக் கடுப்புக்கு ஒத்தடம் போடும் வகையில் ஷீஆக்கள் குறித்த பிரதேசங்களில் உள்ள முக்கியஸ்தர்களை ஈரானுக்கு சுற்றுலா கொண்டு செல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு குழு வீதம் செல்வதாக அறிய முடிகிறது.
இவ்வாறு சுற்றுலா செல்பவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகள், உணவு, தங்குமிடம், ஆடம்பர உணவகங்களில் உபசரிப்பு, ஷீஆ முல்லாக்களின் உபதேச அணிவகுப்பு, ஹதிய்யாக்கள், முத்ஆ கித்ஆ என்று குசியாக ஒரு பத்து நாள் அல்லது ஒரு வாரத்தை கழிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறதாம்.
இந்தச் சுற்றுலாவில் செல்பவர்களுக்கு ஈரானின் முக்கிய இடங்கள் காட்டப்படுவதுடன் ஈரானின் தலைவர்கள் பற்றிய மதிப்பும், மரியாதையும் சோறுபோல் ஊட்டப்படுகிறது.
இவைகளைப் பெற்றுக் கொண்டு இலங்கை வரும் இந்த பெருந்தகைகள் நக்குண்டு நாவை இழந்த நக்குத்தினிகளாக சமூகத்துக்குள்ளே வலம் வருகிறார்கள்.
இவர்களிடம் ஷீஆக்கள் தங்களின் முழுமையான கொள்கையை சொல்வதில்லை. தம்மைப் பற்றி தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் விதமான இடங்களைக் காட்டுவதில்லை. முழுமையான ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சிகளையும், ஈரானின் கண்டுபிடிப்புக்கள், முன்னேற்றங்களில் ஒரு பிரமிப்பையும் உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். அப்படி உருவாக்கவும் படுகிறது. இது ஷீஆக்களின் தந்திரமான ஒரு பிரச்சார முயற்சி. ஏனெனில் இவ்வாறு சுற்றுலா செல்பவர்கள் தங்கள் ஊருக்கு வந்ததும் தன் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் இவ்வாறு சொல்கிறார்கள். ‘‘இவர்கள் (மௌலவிமார்கள்) சொல்வதைப் போன்றெல்லாம் ஈரானில் எதுவுமில்லை. நாங்கள் ஷீஆ இல்லை என்ற போதும் எங்களை நன்றாக கவனித்தார்கள். மனிதனுக்கு உதவும் நல்ல மனிதர்கள் அங்கு உள்ளார்கள்.”
இதுதான் ஷீஆக்களுக்குத் தேவை. ஏனெனில் தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை பொய்ப்பிப்பதுதான் ஷீஆக்களின் பழக்கம். அதற்கு துணையாக இந்த சுற்றுலா சென்ற நபர்களை இனி காட்டப்போகிறார்கள். நாங்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் ஹாஜியாரிடம் கேளுங்கள் என்று சொல்வார்கள்.
அத்தோடு ஷீஆக்கள் விடயத்தில் சமூகம் விழிப்புடன் இருந்தால் இவ்வாறு சுற்றுலா செல்பவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவார்கள். இந்த நேரம் எதுவும் தெரியாத இந்த சுற்றுலா மோகம் பிடித்தவர்களுக்கு ஷீஆக்களுடன் சேருவதைத் தவிர வேறு வழி இருக்காது. காலப்போக்கில் ஷீஆக்களை எதிர்க்கின்ற உலமாக்களுக்கு எதிராக அவர்கள் பேச ஆரம்பிப்பார்கள். காரணம் அவர்களுக்கு ஷீஆக்கள் பற்றித் தெரியாது. அவர்கள் ஷீஆக்களுடன் தொடர்பு வைத்தமையால் சமூகம் அவர்களை ஒதுக்கும்போது ஷீஆக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் உலமாக்களுடன் அவர்களுக்கு கோபம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.
இதனால் தனது மன உளைச்சலுக்கு காரணமாக இருக்கின்ற உலமாக்களை எதிர்க்கின்ற போக்கை கடைப்பிடிப்பார்கள். இதன் மூலம் காலப்போக்கில் ஷீஆக்களுக்கெதிரான பிரச்சாரத்தின் வீரியமும் குறையும் என்று ஷீஆக்கள் எதிர்பார்க்கிறார்கள் (அல்லாஹ் போதுமானவன்)
சகோதரர்களே! எப்படி யுக்தி பார்த்தீர்களா? ‘‘நக்குண்டார் நாவிழந்தார்”
‘‘ஷீஆக்களின் உண்மை முகத்தை காட்ட முயற்ச

Post a Comment