ஈரானுக்குரிய பொறி எங்கே ?!


அமெரிக்கா, இஸ்லாமிய தீவிரவாதத்தை (!) அடக்குவதற்கு , ஷியாக்களை பயன்படுத்துகின்றது . அதனால் ஈரானின் உதவியுடன் ஈராக்கை ஆக்கிரமித்தது .அங்கே ஜிஹாத் போராளிகள் வருவார்கள் என்பதை உணர்ந்திருந்தது . அப்கானிஸ்தானில் அல் காய்தாவுக்கு விசுவாசமான தாலிபான் அரசாங்கத்தை வீழ்த்தியது . சிரியாவில் போராடும் தீவிர அமைப்புகளை மடக்க,ஈரான் , ஹிஸ்புல்லாஹ் ஆகியவற்றின் ஊடுருவலை கண்டு காணாததுபோல் நடந்துகொள்கின்றது . அதற்குப் பதிலாக "அணுவாயுத பேச்சுவார்த்தையில்" முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றது . பொருள...ாதார தண்டனைகளால் தள்ளாடும் , மிதவாத ரூஹாணி அரசாங்கம் விடிவை ஏங்கித் தவிர்க்கின்றது . யமனில் அல்காய்தாவை முடக்க , ஷீயா ஹூதியை பலப்படுத்தியது . நட்பு நாடான சவூதி அரேபியாவின் நேரடி தலையீட்டால் , ஆட்டத்தின் சுறுசுறுப்பு (சற்று) குறைந்தது . ஈரானின் கனவு , தன்னை "வளைகுடா சண்டியனாக" அமெரிக்க ஏற்றுக்கொள்ளவேண்டும் . இதே கனவில் வாழ்ந்த " சத்தாம் ஹுசைனை " , குவைத் என்ற பொறியில் மாட்டியது அமெரிக்கா . ஈரானுக்குரிய பொறி எங்கே ?!Post a Comment