இமாமத் கோட்பாடும் அன்னை ஆயிஷா நாயகியும்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

ஷீஆக்கள் குறித்து நாம் விமர்சனம் எழுதும் போது அங்கு தவிர்க்க முடியாமல் பேசப்படும் ஒரு விடயம் ஆயிஷா நாயகி குறித்த அவர்களின் நிலைப்பாடாகும். முஃமின்களின் தாய் என்ற அந்தஸ்தோடு அல்லாஹ்வின் தூதரின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமாக இருந்த ஆயிஷா நாயகி குறித்து அவர்கள் சொல்லும் அபாண்டங்கள் சொல்லி முடியாது. (ஷீஆக்களால் மாசுபடுத்தப்படும் புனித ஆத்மா என்ற எமது முந்திய பதிவைப் பார்க்கவும்) எனினும், இன்றுள்ள ஷீஆக்கள் இக் கூற்றை முழுமையாக மறுப்பதை அவதானிக்கின்றோம். அவர்கள் மீது வஹாபிகளால் இட்டுக்கட்டப்பட்ட ஒரு அபாண்டமாகவே இதனை சித்தரிக்க முயல்கிறார்கள். ஆதார பூர்வமாக நிறுவப்பட்டும் கூட தமது உண்மை முகத்தைப் பாமரர்கள் அறிந்தால் விரட்டியே விடுவார்கள் எனப் பயந்து இவ் விடயத்தை மறுத்து வருகிறார்கள்.
ஷீஆக்கள் ஆயிஷா நாயகியைத் தூற்றுவதற்குப் பிரதானமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களின் மகள் என்பது. மற்றது ஜமல் யுத்தத்தில் அலி (ரழி) அவர்களுக்கு எதிராகக் களமிறங்கியது. இவ் விரண்டு விடயங்களும் இமாமத் கோட்பாட்டிலேயே தொக்கி நிற்பதை சிந்தனையுள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும்.
அபூபக்கர் (ரழி) அவர்கள் மீதுள்ள இமாமத்தைக் கைப்பற்றியுள்ளார்கள் என்ற வெறுப்பின் உச்சகட்டம் தமது மகளைப் பயன்படுத்தி நபியை மயக்கி விட்டார்கள் (நஊதுபில்லாஹ்) என வர்ணிக்கும் அளவுக்கு ஷீஆக்களை இட்டுச் சென்றிருக்கிறது. இதன் மூலம், அபூபக்கரை மட்டுமல்ல, அல்லாஹ்வின் தூதரையும் இழிவுபடுத்துகின்றனர் இக் கொடியவர்கள். இமாமத் கோட்பாட்டின் பிடிவாத நிலை தான், அபூபக்கர் (ரழி) அவர்கள் தமது மகளுக்கு சார்பாக அவர்களது அவதூறு விடயத்தில் சில வசனங்களை சொருகிக் கொண்டார்கள் என்றெல்லாம் ஷீஆ அறிஞர்களை??? பேசவைத்தது.
அத்தோடு தமது இமாமான அலியை ஒரு யுத்த களத்தில் எதிர்த்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அல்லாஹ்வால் தூய்மைப்படுத்தப்பட்ட அந்த தூய ஆத்மாவை நாக்கூசாமல் விபச்சாரி என வசைபாடி இறுதியாக வருகின்ற இமாம் அவர்களை கப்ரில் இருந்து எழுப்பி அவருக்குரிய ஹத்தை நிறைவேற்றுவார்கள் என்ற கோட்பாட்டோடு தான் இந்த இமாமிய்யாக்கள் வாழ்ந்து வருகிறார்கள். (ஜமல் யுத்தம் குறித்த ஆதார பூர்வமான தெளிவினைப் பெற இஸ்மாயில் மதனீ அவர்கள் எழுதிய "இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள் " எனும் நூலை வாசிக்கவும்)
ஆயிஷா நாயகி குறித்த மேற்படி நிலைப்பாட்டில் இல்லாதவர் இமாமிய்யா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில், தாங்கள் ஏற்றுக் கொண்ட இமாமுக்கு சார்பாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காகத் தான் முழு ஸஹாபாக்ளையும், ஏனைய முஸ்லிம் சமூகத்தையும் தங்களில் இருந்து வேறுபட்டவர்களாக ஷீஆ சமூகம் பார்க்கிறது. அப்படி இருக்கையில் யுத்த களத்தில் தங்கள் இமாமை எதிர்த்தவரைப் போற்றுகிறோம், மதிக்கிறோம் என்று ஷீஆக்கள் பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக உள்ள அதேநேரம் அவர்களது கொள்கையை வெளியே சொல்ல முடியாத வக்கற்ற தன்மையையுமே காட்டுகின்றது.
எனவே, ஷீஆக்கள் தங்களை எப்பெயர் கொண்டு அறிமுகம் செய்து கொண்டாலும் அவர்களது வழிகள் இஸ்லாத்தை விட்டும் தூரமானவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். வெளியில் நாங்கள் இமாமிய்யாக்கள். அலியை இமாம் என்கிறோம். சாதாரண அரசியல் ரீதியான விடயத்தை வஹாபிகள் பிரச்சினையாக்குகிறார்கள். நாங்கள் ஸஹாபாக்களைத் தூற்றுவதில்லை. குர்ஆனை அவமதிப்பதில்லை. ஆயிஷாவை ஏசுவதில்லை என தொண்டை கிழியப் பிரச்சாரம் பண்ணிணாலும் இமாமத் கோட்பாட்டின் பின்னால் அவர்கள் சொல்லும் அத்தனை விடயங்களும் மறைந்து தான் இருக்கின்றன என்பதை மனதில் கொண்டு பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி எமது ஈமானை அடகு வைத்துவிடாமல் எம்மையும் எம் சந்ததிகளையும் பாதுகாத்துக் கொள்வோமாக. நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.
(குறிப்பு : பதிவுகளை வாசிப்பவர்கள் அவற்றை பிறருக்கும் பகிறவும். இவை நியாயமுள்ள ஷீஆ சிந்னையாளர்களின் உள்ளங்களையும் திறக்கக் கூடும். நேர்வழி என்பது இறைவனின் புறத்தில் உள்ளது. நாடியோருக்கு வழிகாட்டுவான். எமது நோக்கம் ஷீஆக்களை எதிர்ப்பதல்ல. சத்தியத்தின் பால் அவர்களை அழைப்பதே. சத்தியத்தைச் சொல்வோம். அவர்களில் தனிநபர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதைத் தவிர்போம். நபியவர்கள் அபூஜஹ்லிடம் கூட அவன் காபிர் என்ற தீர்போடு போகவில்லை. அவன் முஸ்லிமாக வேண்டுமென்ற ஆதரவோடு தான் போனார்கள். எனவே, எமது நோக்கமும் ஷீஆக்கள் சத்தியத்தை சுவாசிக்க வேண்டுமென்பதே)

நன்றி இணையம்

Post a Comment