இறந்தவர்களிடமும், கற்களிடமும் மற்றும் மண்ணிடமும் உதவி தேடலாம் அது ஷிர்க்(இணைவைப்பு) ஆகாது என்று காஷ்ப் அல் அஸ்ரார் என்ற நூலில் கூறுகின்றார் ஷியாக்களின் மத போதகர் ஆயத் அல் கொமினி.

குர்ஆனுக்கு மாற்றமாக பேசும் ஷியா ஆயத் அல் கொமினி:
இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.                                                                                                                                                 (17:23, 98:5)


                                                                                                            -Sahuber Sathik

Post a Comment