கொடூரன் குமைனி

                                                                                            -Hadi Abbasi

குமைனி ஓர் சண்டாளன் என்பதற்கு அவனது வரலாறு சாட்சி .குமைனியின் புரட்சி என்பது வரலாற்றில் ஓர் கறுப்புப்பக்கம் . தலைப்பாகை , கிரீடம் போட்ட வெறியர்களின் கையில் ஈரான் சிக்கிய கதைதான் குமைனியின் புரட்சி . அதீத இறையியல் பேசி மக்களிடம் கபட நாடகம் நடத்தி வஞ்சகம் செய்தவன் குமைனி . ஓர் அரக்கனிடம் இருந்து அவனை விட மகா பெரிய அரக்கனிடம் ஈரானிய மக்கள் மாட்டிக்கொண்ட கதைதான் ஈரானியப்புரட்சியின் சாரம்சமாகும் . குமைனிக்கு குடை பிடிக்கும் ஈரானிய புரட்சி அபிமானிகள் இப்போது வைரசாக பரவி வருவதால் இது பற்றி எழுத விளைகிறேன் .

குமைனி பற்றி எழுதப்பட்ட ஆபத்தான நூல்தான் "الثورة البائسة" என்ற நூல் . இதன் கருத்து " மட்ட கரமான , அபகீர்த்தி மிக்க புரட்சி" என்பதாகும் . ஷீஆ முற்போக்கு வாதியான " கலா நிதி மூஸா அல் மூஸவி " என்பவரால் எழுதப்பட்ட ஷீஆக்களின் முகத்தில் கரியை பூசிய நூலே இதுவாகும் . இதில் விஷேடம் என்னவென்றால் மூஸா அல் மூஸவி நேரடியாக குமைனியை சந்தித்து பேட்டியும் எடுத்த ஒருவர் . அத்தோடு ஈரானிய புரட்சியின் போது ஓர் அவதானியாக களத்தில் நின்ற ஒருவர் என்பதால் இவர் தரும் தகவல்களை ஷீஆக்களால் இன்றளவும் பொய்பிக்க முடியாமல் உள்ளது .
ஷீஆக்களின் புரட்சியை மெச்சி கொஞ்சி விளையாடும் மூடர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து உண்மை ரூபத்தை உலகிற்கு அவிழ்த்துக்காட்டிய இவரின் தகவல்களையும் , அதோடு இணைந்த நான் தேடிய தகவல்களையும் இங்கே பதிகிறேன் .

மன்னர் ஷாஹின் அழிவும் , அடுத்த அராஜஹத்தின் ஆரம்பமும் :--

சுமார் 25 ஆண்டுகளாக ஈரானிய மன்னன் " ஷாஹ்" ஓர் இரும்புப்பிடி ஆட்சியை செய்து கொண்டிருந்தான் . அமரிக்காவின் அடிமையான ஷாஹினால் மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலம் . அரசியல் சுதந்திரமில்லை , கொலை , சிறை அடைப்பு , பட்டினி , 70 சதவீதமான மக்களிடம் எழுத்தறிவின்மை , 80 சதவீதமான மக்களுக்கு உணவில்லை , மின்சாரமில்லை , வருடம் தோறும் 4000 மில்லியன் டோலர் சொந்த நாட்டு நிதியத்திலிருந்து அமரிக்காவிற்கு வழங்கியமை , பெற்றோலிய வருவாயின் மூலம் அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்தமை , ராஜ வாழ்க்கை என " ஷாஹ்" அட்டூழியம் செய்து கொண்டிருந்த காலம். இவ்வளவு அட்டூழியம் செய்து கொண்டு உலகத்திற்கு முன் " நாங்களே நான்காவது சக்தி மிக்க நாடு " என்று மன்னன் ஷாஹ் ஏமாற்றிக்கொண்டிருந்த காலத்தில் மக்கள் இவ்வரக்கனிடமிருந்து எப்படியாவது நாட்டை காப்பாற்றி ஒரு சுதந்திர நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்று தக்க சமயத்தை எதிர் பார்த்திருந்தனர் . அப்போதுதான் மன்னர் " ஷாஹ்" நிரந்தரமாக ஆட்சி கட்டிலிலிருந்து தெறித்து ஓடுவதற்கான முன் ஏற்பாடு ஒன்று நடந்தேறியது . அதாவது அது வரை கரம் கொடுத்த ஆமரிக்க ஆட்சியாளர்கள் மன்னர் ஷாஹின் நோக்கம் நிறைவேறும் விதமாக நடந்தனர் . ஆனால் அமரிக்க அதிபர் ஜெம்மி கார்ட்டர் மாத்திரம் மன்னர் ஷாஹுடனான உறவை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டார் .இதற்கு பல் வேறு உள் நோக்கங்கள் காணப்பட்டன ,ஒன்று புற்று நோயால் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்த " ஷாஹினால் " இனி பயன் எதுவுமில்லை , அதே போன்று அவனது மரணத்தின் பின் அமரிக்காவுடன் கைகோர்த்து நிற்கும் பலமான ஆட்சியாளன் ஒருவனை ஈரானில் உருவாக்க வேண்டும் என்ற முன் திட்டத்தையும் அமரிக்கா தீட்டிக்கொண்டிருந்தது , அமரிக்காவில் இருந்த எதிர்கட்சி உறுப்புக்கள் ஷாஹின் மூலம் அனுபவித்து வருவதும் ஜெம்மி கார்ட்டருக்கு ஆபத்தாக அமைந்ததால் ஷாஹிற்கு நெருக்கடி கொடுத்து தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டார் .அந்தோ பரிதாபம் அது வரை அராஜஹம் பண்ணிய புலி பூனையாக மாறி மக்கள் முன்னிலையில் வந்து மன்னிப்புக்கேட்க ஆரம்பித்தான் , மக்களை அடிப்படையாகக்கொண்ட ஆட்சியை அமைக்கப்போவதாக வாக்களித்தான் . ஆனால் மக்கள் பொய்யன் ஷாஹிற்கு முன் ஏமாந்து போகாமல் இதுதான் சமயம் என போராட்டத்தை முடுக்கிவிட ஆரம்பித்தார்கள் .

ஆனாலும் ஷாஹை எதிர்த்து குதிப்பது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது , பல்லாயிரக்கணக்கான ராணுவ பலத்துடனும் ஆயுத பலத்துடனும் இருந்தான் . நிராயுத பாணிகளாக மக்கள் இருந்ததால் போராட்டத்திற்கு ஒரு கட்டமைப்பும் பொறி முறையும் தேவைப்பட்டது . ஈரானே கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தது சண்டாளன் ஷாஹிற்கு எதிராக !! எனினும் மக்கள் போராட்டம் ஒரு தலமையின் கீழ் அமைய வேண்டிய உடனடி தேவை இருந்ததால் ஒரு தலைவனை தேடிக்கொண்டிருந்தார்கள் . அப்போதுதான் உலகில் மிகப்பெரிய அவமானம் ஒன்று நடந்தேறியது !!!

அரக்கன் குமைனி தேர்வு செய்யப்படல் :
அது வரை எவ்வித கஷ்ட நஷ்டங்களிலும் கலந்து கொள்ளாத அரக்கன் ஒருவன் இருந்தான் , ஈராக்கில் சுகமாக இருந்தான் , அவனையே மக்கள் போராட்டத்தலைவனாக தேர்வு செய்தனர் . அவனே குமைனி என்பவன் . ஏன் குமைனியை மக்கள் தேர்வு செய்தார்கள் என்பதற்கு மிக முக்கியமான காரணங்கள் உள்ளன . அவற்றை கொஞ்சம் வாசித்தாலேயே குமைனியின் திருகுதாளங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடும் . அப்போது மன்னன் ஷாஹை எதிர்த்து போராடிய பல கட்சிகள் ஈரானில் காணப்பட்டன .
= அல்ஜப்ஹதுல் வதனிய்யா 
= நஹ்ழதுல் முகாவிமதுஷ் ஷஃபிய்யா
=முஜாஹிதீன் கல்க்
=கலா நிதி ஷரீஅத்தியின் அமைப்பு
=இடது சாரி அமைப்பு
=ஆன்மீகத்தலைவர்களின் அமைப்பு


இப்படி பல அமைப்புக்கள் ஈரானில் காணப்பட்டன . இக்கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பினும் ஷாஹை விரட்ட ஒன்று பட்டன. போராட்டத்தின் போது எந்த ஒரு கட்சியும் தம்மை அடையாளப்படுத்தி போர் முனைப்பில் ஈடுபட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனையக்கூடாது . எனவே அரசியல் ஈடுபாடு இல்லாத , ஆட்சிக்கட்டிலை விரும்பாத பொதுவான ஆன்மீகத்தலைவனை தேர்வு செய்வதே பொருத்தம் என்று முடிவு செய்தே குமைனியை தேர்வு செய்தனர் . குமைனியின் நடிப்பையும் கபட நாடகத்தையும் அறியாத மக்கள் மன்னன் ஷாஹை விட கொடியவனாகிய குமைனியை வம்புக்கு வாங்கிக்கொண்டனர் . போரை வழி நடாத்திவிட்டு மீண்டும் தமது ஆன்மீகப்பணிகளுக்கு சென்று விட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் மக்கள் இவனை தேர்வு செய்தனர் . ஷாஹ் விரட்டப்பட்ட பின் மக்களிடம் சன நாயக வழியில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தி அதில் தெரிவு செய்யப்படுபவர் ஆட்சி செய்ய வேண்டும் என முடிவாகியிருந்தது . இது எல்லாவெற்றிற்கும் சேர்த்து மிகப்பெரிய ஏமாற்றையும் மோசடியையும் சூழ்ச்சியையும் மிகக்கட்சிதமாக பின்னிக்கொண்டான் குமைனி !! எல்லோருக்குமாக சேர்த்து ஆப்படித்துவிட்டு தானே அதிபராக மாறுவதற்குத்தேவையான எல்லா பொறி முறைகளையும் நயவஞ்சகத்தனமாக கோர்த்து வந்தான் 
.
அமரிக்காவின் கள்ளப்பிள்ளையானான் குமைனி :
இனி ஒன்றுக்கும் ஆகாத புற்று நோயாளி ஷாஹை விரட்டி விட்டு தனது உள் நோக்கை அடைந்து கொள்ள வசமாக சமைந்தவன்தான் குமைனி , குறிப்பாக அன்று ரஷ்யா கம்யூனிசத்தை விதைத்து வந்தது , அமரிக்காவின் எதிரி ரஷ்யாவின் படலம் படர ஆரம்பித்த போது அதை எதிர்த்து நிற்க குமைனியின் உதவி அமரிக்காவிற்கு தேவைப்பட்டது . ஈரான் மக்களுக்கு 30 ஆண்டு காலம் கொடூரம் நடக்க அமரிக்காவே காரணமாக இருந்ததால் மக்கள் கட்சிகளை நாடுவது சுலபமல்ல என்பதை உணரந்த அமரிக்கா குமைனியை தனது ஆடைக்குள் அரவணைத்துக்கொண்டான் . அமரிக்காவின் தயவின்றி ஆட்சியில் அமர முடியாது என்பதை உணர்ந்த குமைனி ரகசியமாக அமரிக்காவை ஆதரித்தான் . மக்களிடம் நடிப்பதும் அமரிக்க எதிர்ப்பாளனாக தன்னை காட்டிக்கொள்வதும் , பிறகு பின்பக்கமாக அமரிக்கனைத்தேடியும் ஓடிக்கொண்டிருந்தான் குமைனி .இது தொடர்பான ஆவணங்கள் நிறைய உள்ளன .

கலா நிதி இப்ராஹீம் அல்யஸ்தி என்பவன் அமரிக்க குடி உரிமை பெற்றிருந்தான் . குமைனியின் மிக நெருங்கிய கள்குடித்தோளர்களில் ஒருவனே இப்ராஹீ யஸ்தீ என்பவன் .இவனுக்கு அமரிக்காவுடன் அரசியல் ரீதியான தொடர்பிருந்ததால் ஈராக் இவனை தனது எல்லைக்குள் நுழைய தடைவிதித்திருந்தது . எனினும் குமைனி மீண்டும் மீண்டும் கெஞ்சி இராக்கிடமிருந்து அனுமதி பெற்று ஒருவாறாக இவனை ஈராக்கினுள் நுழைய வழியமைத்தான் . வெறும் 24 மணி நேரத்திற்கு அனுமதி வழங்கக்கேட்ட குமைனி அதைப்பயன் படுத்தி ஆயுட்கால அரசியல் ராஜதந்திரியாக தன்னோடு இப்ராஹீம் அல்யஸ்தியை வைத்துக்கொண்டான் .

அமரிக்க அரசியல்வாதி ஈரானிய அரசியல் வட்டத்தில் மிக முக்கிய இடத்தில் இருந்ததால் குமைனிக்கும் அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நெருங்கிய உறவு ஏற்பட காரணமாக இருந்தது , இது ஏனைய ஈரானிய சுதேச கட்சிகளிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

மன்னர் ஷாஹை விட பன் மடங்கு நன்கு திட்டமிடப்பட்ட மிக இறுக்கமான அரசியல் நரித்தந்திர வலைப்பின்னல்களுடன் அமரிக்காவுடனான தனது தொடர்புகளை கயமைத்தனமாக உருவாக்கி தனது இருப்பை வளர்த்து வந்தான் குமைனி . பிரான்சில் குமைனிக்கும் முன்னால் அமரிக்க நீதித்துறை அமைச்சர் ரம்சி கலாரிக் என்பவனுக்குமிடையில் மிக முக்கிய பேச்சுவார்த்தை நடந்தது , அதே போன்றே ஈரான் தலை நகர் தெஹ்ரானில் அமரிக்க முக்கிய பிரமுகர்களுக்கும் குமைனிக்கும் இடையில் வட்ட மேசை மகா நாடு நடந்தது .குமைனியின் முக்கிய அடியாற்களான பாஸிர்கான் , பஹ்ஷ்தி , ரப்ஸன் ஜானி , போன்றவர்கள் குமைனிக்கும் அமரிக்காவிற்குமிடையில் நீறைய பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அப்போதே உடகங்களுக்குத்தெரிவித்திருந்தார்கள் . டொக்டர் ஜம்ரான் என்பவனும் , இப்ராஹீம் யஸ்தி என்பவனும் அமரிக்காவின் உளவுத்துறை கைக்கூலிகள் என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரியை அலையை முடுக்கிவிட்டிருந்தது .

இதில் மிக முக்கிய ஒன்றுதான் மன்னர் ஷாஹ் ஏற்கனவே அமரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் . அவைகள் கிட்டத்தட்ட 900 ஒப்பந்தங்கள் என்பது ஒரு முக்கிய விடயம் . அவ்வொப்பந்தங்கள் யாவும் அமரிக்க நலனுக்காகவும் ஆயுத கொள்கலன்களுக்காகவும் போடப்பட்ட ஒப்பந்தங்களாகும் .குமைனி அந்த ஒப்பந்தங்களில் எதையும் ரத்து செய்து அமரிக்காவினை முறித்துக்கொள்ளவில்லை . தொடர்ந்தும் அவை செயற்பாட்டில் இருந்தன . இது போக அப்போது இருந்த அமரிக்க கைக்கூலி ஊடகங்கள் மற்றும் , ஐரோப்பிய ஊடகங்கள் யாவும் உலகளவில் குமைனியின் செய்தியை பூதாகரமாக அறிவித்து வந்தன . உலகிற்கு குமைனியை அடையாளப்படுத்தியவர்களே மேற்கத்தியர்கள்தான் . மிக முக்கியமாக bbc குமைனியின் ஒவ்வொரு அசைவையும் வர்ணித்து அவனுக்கு புகழ் தேடிக்கொடுக்கொடுத்துக்கொண்டிருந்தது .

இப்படி நீரிணுல் நெருப்பை பாய்ச்சிக்கொண்டு அமரிக்காவுடன் உல்லாசம் செய்து கொண்டிருந்த குமைனியை உஷ்னம் மிக்க போர்க்களத்தில் மக்களால் சரியாக அடையளம் கண்டு கொள்ள முடியாமல் போனது . இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்ட குமைனி அரக்கத்தனமாக பல படு கொலைகளை செய்து அரியணை ஏறினான் . அது எப்படி என்று அடுத்த பதிவில் வரைகிறேன் விரைவில் இன்ஷா அல்லாஹ் !!


Post a Comment