சதிக் கூட்டணி:ஈரான் ,இஸ்ரேல் அமெரிக்காவுக்கிடையிலான ரகசிய உறவுகள்...

==================================================================

ட்ரிதா பர்சி என்ற ஈரானிய பூர்வீகத்தைக் கொண்ட ஆசிரியரால் எழுதப்பட்ட மேற்படி நூல் சம காலத்தில் ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான கள்ள உறவுகளை ஆக்கபூர்வமாகவும் ஆதாரங்கள் அடிப்படையிலும் எழுதப்பட்ட ஒரு சம கால ஆய்வு என்றால் அது மிகையல்ல.


ட்ரிதா பார்சி "ஜோன் ஹொப்கென்ஸ்" பல்கலைக் கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர்.குறித்த பல்கலைக் கழகத்திலேயே கலாநிதி பட்டத்திற்காக "ஈரானிய இஸ்ரேலிய உறவுகள்" என்ற ஆய்வு நூலைச் சமர்ப்பித்து பட்டம் பெற்றவர்.

வெறுமனே மக்களை மேய்க்க விடுக்கப்படும் அறிக்கைகளுக்கு அப்பால் குறித்த மூன்று நாடுகளும் தங்களுக்கிடையிலான பொது நலன்களை செயற்படுத்துவதில் எவ்வாறு திரைமறைவில் காய்களை நகர்த்துகின்றார்கள் என்ற விபரங்களை துல்லியமாக தரவுகள் ஊடாக முதல் முறையாக உலகுக்கு வழங்கிய புத்தகம் என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.


மேலும் , அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் ட்ரிதா நன்கு பரிச்சயம் உள்ளவர் என்ற வகையிலும் ஈரானிய அமெரிக்க சபையின் தலைவர் என்ற வகையிலும் குறித்த மூன்று நாடுகளுக்கிடையிலான தீர்மாணங்களில் தாக்கம் செலுத்துபவர் என்ர வகையிலும் அவர் நூலில் தந்திருக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை உறுதியானது என்ற வகையிலும் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகின்றது.
அத்துடன் ,குறித்த நூல் கடந்த ஐம்பது வருடங்களில் இடம் பெற்ற ஈரான் இஸ்ரேலிய உறவுகளையும் அதனால் அமெரிக்க அரசியலில் இடம் பெற்ற தாக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் 130 க்கும் மேற்பட்ட ஈரானிய ,இஸ்ரேலிய, அமெரிக்க உயர் மட்ட ராஜ தந்திரிகளைக் கண்டு நடத்திய நேர்காணல்களையும் ஆவணங்களையும் பகுப்பாய்வுகளையும் கொண்டுள்ளது.

ஈரான் இஸ்ரேலுக்கு எதிரான நாடு என்ற தோற்ற மயக்கத்தை தக்க ஆதாரங்களுடனும் தெளிவான சான்றுகளுடனும் தகர்த்தெறியும் இந் நூல் அறபு நாடுகளை ஏப்பம் விடுவதில் மேற்படி மூன்று தீய சக்திகளுக்கிடையிலான ரகசிய உறவுகளை, சதிக் கூட்டணியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் ஆய்வு நூல் என்பதில் சந்தேகமில்லை.

  ஆங்லிலத்தில் வாசிக்க: http://qawim.net

Post a Comment