ஷீஆக்களின் கொள்கைச் சறுக்கல்களை தொட்டுக்காட்டும் எமது தொடரில் இறை நம்பிக்கையோடும், இறைச் சட்டங்களோடும் தொடர்புபட்டு அவர்களின் பேரறிஞர்கள் கொட்டிய குப்பைகளை இங்கே அடையாளப் படுத்தி வருகின்றோம். 

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்பதும், அவனால் மார்க்கமாக்கப்பட்ட விடயங்கள் மட்டுமே நன்மையாவை என்பதுமே ஒரு முஃமினது நம்பிக்கையாகும். இதற்கு மாற்றமானவை அனைத்துமே இறை நம்பிக்கைக்குப் புறம்பானவையாகும். கப்று வணக்கம் என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல என்பது அனைவரும் அறிந்ததே. சமகால ஷீஆக்கள் தங்கள் கொள்கை அழுக்கை மறைக்க இந்த செயற்பாட்டுக்குள் மறைந்து கொள்வதை அவதானிக்கின்றோம். 


கப்று வணக்கத்தை இல்லாதொழிக்கப் பாடுபடுபவர்களை வஹ்ஹாபிகள் என அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக அதனைப் பயன்படுத்துவதனூடே கேடுகெட்ட கொள்கைகக்கு வக்காலத்து வாங்க நினைக்கின்றனர். ஆனால், கப்று வணக்கத்தை ஆதரிப்பவர்கள் கூட ஷீஆக்களின் அடாவடியான கப்று வணக்கத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். 

கப்றுகளை சியாரத் செய்வது நபிவழி எனினும் அதனை வலம் வருதல், முத்தமிடுதல், அங்கு விழா நடத்தல் என்பன வரையறைக்கு அப்பாற்பட்ட வழிகேடுகள் என்பதில் ஐயமில்லை. எனினும், கப்று வணங்கிகள் கூட பெரியார்கள், அவ்லியாக்கள் என சிலரை மேன்மைப் படுத்த ஈரானிய ஷீஆக்கள் மட்டுமன்றி அனைத்து ஷீஆக்களும் இஸ்லாமிய சாம்ராஜியத்தின் இரண்டாவது கலீபாவான உமர் (ரழி) அவர்களை முதுகுக்குப் பின்னால் கோழைத்தனமாகக் குத்திக் கொலை செய்த அயோக்கியன் " அபூ லுஃலுஆ அல் மஜூஸி" என்பனுக்கே கப்று கட்டி விழாக் கொண்டாடுகிறார்கள் என்றால் கப்று வணக்கம் என்பது வெறும் விடயமல்ல. ஷீஆக்களின் கொள்கையில் இரண்டரக் கலந்தது என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.


இதனை உறுதிப் படுத்தும் விதமாக அமைந்த இவர்களது அறிஞர்களது கருத்துக்களை இனிவரும் சில தொடர்களில் நோக்குவோம். ஷீஆக்களின் புகழ்பெற்ற ஹதீஸ்கலை வல்லுனர்களில் ஒருவரும், பேரறிஞருமான ஹுஸைன் அந் நூரி அத் தப்ரஸீ என்பவர் தனது ஹதீஸ் நூலான "முஸ்தத்ரகுல் வஸாஇல் வ முஸ்தன்பதுல் மஸாயில் " எனும் நூலின் 366 வது பக்கத்தில் "கப்றுகளை வலம் வருதல் கூடும் " எனும் பாடத்தை இட்டு பாத்திமா (ரழி) அவர்கள் தனது தந்தையான முஹம்மத் (ஸல்) அவர்களது கப்றை (தவாப்) வலம் வந்ததாக வடிகட்டிய ஒரு பொய்யினைப் பதிவு செய்துள்ளார். (மூல வாசகம் புகைப்படத்தில்)படங்களில் உள்ளவை ஈரானில் உள்ள அபூ லுஃலுஆவின் தர்ஹாவாகும். கப்ரு வணக்கம் எனும் சகதியைப் பயன்படுத்தி தமது நயவஞ்சக தனத்தால் இஸ்லாமிய அடிப்படைகளை ஷீஆக்கள் ஆட்டம் காணச் செய்கின்றனர். இதனை மறைக்க வஹாபிஸத் திரையைப் போட்டவுடன் உள்ளே இருப்பது தொரியாமல் சில வஹாபிஸ எதிர்ப்பாளர்கள் முட்டி மோதுகின்றனர். விளைவு, ஈமானை இழந்த ஒரு சமூகம் மர்க்கத்தின் பெயரால் கட்டமைக்கப் படுகின்றது.

எனவே,எந்தப் போர்வையில் வந்தாலும் ஷீஆக்கள் இஸ்லாத்தின் எதிரிகளே என்பதைப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.
தொடரும்...

Post a Comment