இஸ்லாத்தின் மூலாதாரங்களில் கை வைத்து தமது கொள்கைக்கு ஏற்றாற் போல் அவற்றை வடிவமைப்பது ஷீஆக்களின் கை வந்த கலையாகும். அதி கூடிய பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள் எனும் வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இவர்களே. லட்சக்கணக்கான செய்திகளை நபியவர்களின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள். 
தமது கொள்கைக் குடிசைக்கு நபியின் பொன் மொழிகளால் வெள்ளையடிக்க முனைந்து தோற்றுப் போன கயவர்களே ஷீஆக்கள். இமாமத் கோட்பாட்டை இறையியலாகக் காட்ட அவர்கள் செய்த முயற்சிகள் ஏராளம். ஆதாரபூர்வமான செய்திகள் அனைத்தையும் தட்டி விட்டு அடிப்படை அற்ற குப்பைகளை ஹதீஸ்களின் பெயரால் உற்பத்தி செய்து உலகம் முழுக்க உலாவ விட்டனர். 

அவற்றில் ஒன்றையே இங்கு தருகிறோம். அஹ்மத் அல் அஹ்ஸாஇ எனும் ஷீஆ அறிஞர்(?) தனது "ஷரஹுஸ் ஸியாரா அல் ஜாமிஆ அல் கபீரா " எனும் நூலில் 371 ம் பக்கத்தில் பின்வரும் செய்தியைப் பதிவு செய்கின்றார். 

"ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அந்நேரம் அலி (அலை) அவர்கள் அங்கு வர ஜிப்ரீல் (அலை) அவர்கள் எழுந்து நின்றார்கள். இதனைக் கண்ணுற்ற நபியவர்கள் இந்த வாலிபருக்காகவா எழுந்திருக்கிறீர்கள்? என வினவினார்கள். எனக்கு அவர் ஆசானாகும் என ஜிப்ரீல் பதிலளித்தார்கள். எப்படி உங்களுக்கு இவர் கற்பித்தார் என நபியவர்கள் வினவ, அல்லாஹ் என்னைப் படைத்த போது நீ யார்? உமது பெயர் என்ன? நான் யார்? எனது பெயர் என்ன? என்றெல்லாம் வினவினான். நான் பதில் தெரியாமல் தடுமாறினேன். அந்த நேரம் இந்த வாலிபர் ஆலமுல் அன்வார் எனும் ஒளி உலகில் இருந்து வந்து அவைகளுக்கான பதிலை எனக்குக் கற்பித்தார். ஜிப்ரீலே, நீ எனது மகத்தான இறைவன். உனது பெயரோ அழகன். நான் உனது பணிவான அடிமை. எனது பெயரோ ஜிப்ரீல் எனப் பதில் சொல்லுங்கள் என்றார். இதனால் தான் எழுந்து நின்று மரியாதை செய்தேன் என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். 
அப்போது நபியவர்கள் ஜிப்ரீலே உமது வயது என்ன? என வினவினார்கள். அல்லாஹ்வின் தூதரே, அர்ஷில் இருந்து முப்பதாயிரம் வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நட்சத்திரம் உதயமாகும். அதனை முப்பதாயிரம் தடவைகள் நான் பார்த்துள்ளேன் எனப் பதிலளித்தார்கள்"


சுப்ஹானல்லாஹ், ஆதமைப் படைக்க முதலே அலியைப் படைத்ததாய், அதுவும் ஜிப்ரீலுக்கே ஆசானய் ஆக்கி நாக் கூசாமல் பொய் பேசும் இவர்களை என்னவென்று சொல்வது...??? அல்லாஹ்வின் தூதரையும் கேவலப்படுத்தும் இதுபோன்ற செய்திகளை இட்டுக் கட்டும் ஷீஆ விஷமிகளிடம் இருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும். 
ஷீஆக்களின் கொள்கைகளை சரி காணும் சகோதரர்களே, இதுபோன்ற செய்திகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்...??? இவை பொய் என்றால் பொய்யை இட்டுக் கட்டிய இவருக்கு என்ன தீர்ப்புச் சொல்லப் போகிறீர்கள்...??? இல்லை இது சரி என்றால் ஹதீஸ்கலை விதாகளை வைத்து நிரூபியுங்கள் பார்க்கலாம். உங்கள் அறிஞரின் நூலில் இருந்து தான் தந்துள்ளோம். தயவு செய்து வழமையான பாணியில் இது எங்கள் அறிஞரின் மீது புணைந்துரைக்கப்பட்டது என்று சொல்லி மட்டும் நழுவி விடாதீர்கள். உலகின் கண்கள் விசாலமானவை. அசத்தியத்திற்கு ஆயுள் குறைவு தான்.

Post a Comment