ஷீஆக்கள் என்பவர்கள் சாதாரணமாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளத் தக்க கொள்கையினைக் கொண்டவர்களல்ல. அதேநேரம், இவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன என ஒதுங்கும் அளவுக்கும் சாதாரணமானவர்களும் அல்ல. இஸ்லாம் எனும் போர்வைக்குள் மறைந்து கொண்டு மறைமுகமாக இஸ்லாத்தை வேரறுக்கும் கொடியவர்கள் அவர்கள். அடிப்படை ஈமானுனுக்கு விரோதமான கருத்துக்களை இஸ்லாம் எனப் போதிப்பதில் வல்லவர்கள். 

ஷிர்குக்கும், தௌஹீதுக்கும் கூட சரியான விளக்கம் தெரியாமல் குழப்பிப் போயுல்ல மட்டைகள். இஸ்லாத்தின் பெயரால் இணைவைப்பைத் தூண்டி மார்க்கமென பாமர மக்களை ஏமாற்ற நினைக்கும் கூட்டத்தோடு இணைந்து இஸ்லாத்தை அழிக்கப் புறப்பட்ட யூதத்தின் கைக்கூலிகள் இவர்கள். இத்தனை குற்றச் சாட்டுக்களையும் போன போக்கில் அள்ளி வீசிவிடவில்லை. களை பிடுங்கும் எமது தொடரில் அவர்களின் நூற்களில் கண்ட உண்மைகள் இவை. 
ஷீஆக்களின் நவயுக நாயகனும், ஆன்மீகத் தலைவரும், பேரறிஞரும், அரசியல் விற்பன்னரும், ஈரானியப் புரட்சியின் கதா நாயகனும், நவீன ஷீஆயிஸத்தின் முன்னோடியுமான "ரூஹுல்லாஹ்(?) அல் குமைனீ " என்பவன் தனது "கஷ்புல் அஸ்றார் " எனும் நூலில் பின்வரும் கருத்தைப் பதிவு செய்கிறான். (மூல வாசகங்கள் புகைப்படத்தில்)

"மரணித்தவர்களிடம் உதவி தேடுதல். 
நபிமார்கள் மற்றும் இமாம்களில் மரணித்தவர்களிடம் உதவி தேடுதல் நன்மையோ தீமையோ அழிக்காத இணை வைத்தல் (ஷிர்க்) எனப்படுகிறதே,
இந்த ஐயத்திற்கான பதில் :
முதலாவது : உங்கள் கருத்தின் பிரகாரம் இணை வைத்தல் மற்றும் இறை நிராகரிப்பு இவற்றுக்கான நாட்டங்களைப் புரிந்து கொள்கிற வரைக்கும் இவற்றின் கருத்தினை விளங்க முடியாது. இணை வைப்பு என்பது அல்லாஹ் அல்லாத ஒருவரிடம் அவர் "ரப்பு " என நம்பி எதையும் தேடுவதாகும். இவை தவிர உள்ளவை ஷிர்க் அல்ல. இதில் உயிருள்ளவர், மரணித்தவர் எனும் பேதம் கிடையாது. கல், சிலைகள் போன்றவற்றிடம் கேட்பது கூட ஷீர்கல்ல. எனினும் அவை வீணான விடயங்களாகும் "

ஷிர்க் குறித்த ஒரு பேரறிஞரின்? விளக்கங்களே இவை. இவரின் கூற்றுப் படி மக்கா காபிர்கள் யாருமே இணை வைப்பாளர்கள் கிடையாது. ஏனெனில், அவர்கள் யாருமே தாம் வணங்கிய சிலைகளை ரப்பு என்று சொன்னது கிடையாது. இதனை அல்குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டி நிற்கிறது. ரப்பு எனும் வார்த்தை படைப்பாளன், பராமரிப்பவன், பாதுகாவலன் எனும் அர்த்தங்களைப் பொதிந்துள்ள ஒரு வார்த்தையாகும்.
"நபியே, வானம், பூமியிலுள்ளவர்களுக்கு உணவளித்து, பார்வை, கேள்விகளை சொந்தப்படுத்தி மரணித்தவற்றில் இருந்து உயிருள்ளவைகளையும் உயிருள்ளவைகளில் இருந்து மரணித்தவைகளையும் வெளியாக்கி காரியங்களை நிர்வகிப்பவன் யார் என அவர்களிடம் கேட்பீராக. அதற்கவர்கள் அல்லாஹ் எனக் கூறுவார்கள் " 

எனும்இறை வசனம் மக்கா காபிர்கள் கூட தமது தெய்வங்களை ரப்பு என்று நம்பவில்லை என்பதைத் தெளிவு படுத்தும் அதே வேளை,  கொமைனி என்பவன் தமது சகாக்களைப் பாதுகாக்க அர்ப்புதமான விளக்கத்தினை முன் வைக்கிறான். 
சிலைகளிடம் கேட்பது கூட இணைவைப்பல்ல எனும் புதுமையான விளக்கத்தை முன் வைப்பதனூடே ஷீஆக்களின் உண்மை முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய பெருமை இவனையே சாரும். ஷீஆக்கள் காபிர்களா என வினவும் சகாக்களுக்கு கொமைனியே தனது நூலில் பதில் கொடுத்து விட்டார். 

இதையும் வஹாபிச சாயமிட்டு மறைக்க சில சில்லறைகள் தயாராகவே இருக்கிறார்கள். அதற்கு வக்காலத்து வாங்கவும் சில அரை வேக்காடுகள் களத்தில் இருக்கின்றன. துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும், நெருப்பிலிட்டுப் பொசுக்கப்பட்டாலும் இணை வைப்பை ஏற்றுக் கொள்ளாதவன் தான் உண்மையான முஸ்லிம். கற்களையும், சிலைகளையும் வணங்குவது கூட இணைவைப்பில்லை என்றால் ஏன் அல்லாஹ்வின் தூதரும் அவரின் தோழர்களும் போர்க்களம் வரைப் போக வேண்டும்...?? எதற்காக உயிரையும், உடைமைகளையும் இழக்க வேண்டும்...???
யாரும் சொல்லாத வரைவிலக்கணத்தை கண்முன்னே கொண்டு வந்த இந்த கொமைனியை முஷ்ரிக் என்று சொல்ல இந்த ஷீஆக்கள் முன் வருவார்களா...??? இல்லை மறுபடியும் வஹாபிச திரைக்குப் பின்னால் பொன்னைத் தனமாய் ஒழிந்து கொள்வார்களா...???

ஈமானை நேசிப்பவர்களுக்காய் இந்தப் பதிவு.
தொடரும்...

Post a Comment