ஷீஆக்களின் வழிகேடுகள் குறித்து நோக்கும் எமது தொடரில் அல்குர்ஆன் குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ள அற்பமான சிந்தனைகள் குறித்து நோக்கி வருகிறோம். 

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய எந்தவொரு சிந்தனைப் பிரிவும் முன் வைக்காத அடிப்படை ஈமானை விட்டும் தூரப்படுத்துகின்ற கருத்துக்களை அதிகமாக முன் வைத்தவர்கள் இந்த ஷீஆக்களே. அதே நேரம், தமது கொள்கையினை மறைத்து நல்லவர்கள் போல் நாடகமாடி பாமர மக்களை நம்ப வைப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. 

கொள்கை என்ற பெயரில் கேடுகெட்ட சிந்தனைகளை வைத்துக் கொண்டு அவற்றை மூடி மறைக்க "தகிய்யா " எனும் நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றி தமக்கென ஜனரஞ்சகம் தேடுவதில் இந்த ஷீஆக்கள் வல்லவர்கள். பொதுப் பணிகளின் பெயரில் வெட்டும் கிணறுகளுக்குள்ளும், கட்டும் வீடுகளுக்குள்ளும், சில சில்லரைச் சிதறல்களுக்குள்ளும் தமது கொள்கைக் குப்பைகளை மூடி மறைக்க சமகாலத்தில் அதீத பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். 


விட்டுவிட முடியாத புற்று நோயாய் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் ஷீஆ விஷம் குறித்து தெளிவு பெற வேண்டிய கடமைப் பாடு ஒவ்வொரு ஈமானியனுக்கும் உண்டு. இழக்க முடியாத சொத்தாய் இதயத்தில் ஆழப்பதிந்த ஈமானிய விதை விருட்சமாய் வளரும் வரை உயிர் போகினும் ஈமானை இழக்க மாட்டோம் எனும் கோட்பாட்டைக் கண் முன் நிறுத்தி ஷீஆக்களின் அடிமட்டக் கருத்துக்களை அம்பலப் படுத்துகிறோம்.

அந்த வரிசையில், ஷீஆக்களின் புகழ் பெற்ற ஹதீஸ் கலை வல்லுனரும், திகதுல் இஸ்லாம் எனும் புனைப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டவரும், குர்ஆனுக்கு அடுத்ததாய் ஷீஆக்களால் புகழப்படும் ஹதீஸ் நூலைத் தொகுத்தவரும், பல்வேறு ஆய்வு நூற்களின் சொந்தக்காரருமான முஹம்மத் பின் யஃகூப் அல் குலைனீ என்பவன் தனது "அல்உசூலு மினல் காபீ " என்ற பிரபலமான நூலின் 1ம் பாகம் 239ம் பக்கத்தில் அல்குர்ஆன் குறித்து பின்வரும் கருத்துக்களைப் பதிவு செய்கின்றான். (மூல வாசகம் புகைப்படத்தில்)
ஒரு நீண்ட செய்தியின் தொடரில் இது வருகிறது. அபூ பஸீர் என்பவர் அபூ அப்தில்லாஹ் என்பவரிடம் வினவும் சில வினாக்களுக்கு அவர் பதிலளிக்கின்றார். அன் தொடரில் அபூ அப்தில்லா சொல்கிறார்

 "எங்களிடம் பாத்திமா (அலை) அவர்களது முஸ்ஹப் (குர்ஆன்) என்று ஒன்று உள்ளது. அப்படியென்றல் என்னவென்று நீர் அறிவீரா? என அபூ பஷீரிடம் வினவுகிறார். அதற்கு பாத்திமாவுடைய முஸ்ஹப் என்றால் என்னவென்று நான் கேட்டேன். அது இப்போது இருக்கும் உங்களது குர்ஆனைப் போன்று மூன்று மடங்கு பெரியதாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களது குர்ஆனில் இருக்கும் ஒர் எழுத்துக் கூட அதில் கிடையாது "

 என பதிலளித்தார்கள்.
ஆதார பூர்வமான நூலின் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்ட அப்பட்டமான பொய்யினை ஆதாரமாகக் கொண்டு ஒட்டு மொத்த ஈமானியர்களின் தலையிலும் மிளகாய் அரைக்க முனைகிறார்கள் இந்த ஷீஆக் கயவர்கள். இதைவிட இவர்களது வழிகேட்டை வெளிக்காட்ட வேறு என்ன ஆதாரம் வேண்டும்...??? காபியில் காட்டுங்கள், காபியில் காட்டுங்கள் என கூப்பாடு போட்டவர்கள் இதற்கு பதில் சொல்ல முன் வருவார்களா...??? குர்ஆனைக் கையில் வைத்துக் கொண்டு இதுதான் எங்கள் வேதமென்று சொல்லும் ஷீஆ நடிகர்கள் இனிமேலாவது தமது கொள்கையின் வழிகேட்டை உணர்வார்களா...???
தொடரும்...

Post a Comment