ஷீஆக்களின் விஷமக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் எமது தொடரில் அல் குர்ஆன் தொடர்பாக அவர்கள் கொண்டுள்ள கோட்பாடுகளை அவர்களின் மூல நூற்களில் இருந்தே விளக்கி வருகின்றோம். 
அல் குர்ஆன் என்பது அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட நாள் முதல் மறுமை வரைக்கும் மாற்றமின்றி பாதுகாக்கப்படும் மரிபூரண வேதம் என்பதே ஒரு உண்மையான மூஃமினின் ஆளமான நம்பிக்கையாகும். குர்ஆனிய மாற்றம் என்பது சாதாரண மனிதர்களால் மட்டுல்ல. அதை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அல்லாஹ்வின் தூதரால் கூட இடம் பெற முடியாது எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு தான் உலகமே அதை உற்றுப் பார்க்கிறது. 

இது இவ்வாறிருக்க அல்குர்ஆன் குறித்து ஷீஆக்கள் முன் வைக்கும் கருத்துக்கள் எம் இதயங்களை ஒருமுறை உழுக்கி எடுக்கின்றன. சத்திய வேதத்தை நோக்கி சாரை சாரையாய் மக்கள் வந்து கொண்டிருக்க அதை தடுத்து நிறுத்தும் யூதத்தின் ஏஜன்டுகளாக இவர்கள் செயற்படுவது அவர்கள் குறித்த எச்சரிக்கையை மக்கள் மயப்படுத்தத் தூண்டுகிறது.

அந்த வகையில், இன்றைய எமது தொடரில் ஷீஆக்களின் புகழ் பெற்ற ஹதீஸ் கலை வல்லுனர்களில் ஒருவரும், அவர்களிடம் அடிப்படை மூலாதாரமாக அங்கீகாரம் பெற்ற "உஸூலுல் காபீ " எனும் நூலுக்கு விளக்கவுரை எழுதியவரும், சுமார் எழுபதுக்கு மேற்பட்ட ஷீஆக்களின் ஹதீஸ் மற்றும் வரலாறு சார் நூற்களை எழுதியவருமான முஹம்மத் பாகிர் அல் மஜ்லிஸீ என்பவன் தனது "மிஆதுல் உகூல் பீ ஷரஹி அக்பாரி ஆலிர் ரசூல் " எனும் "உஸூலுல் காபி " இன் விரிவுரை நூலில் 12 ம் பாகம் 525 ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். (மூல வாசகம் புகைப்படத்தில் உள்ளது)
"28 வது ஹதீஸ் : .............. இந்த செய்தி ஆதாரமானதாகும். இந்த செய்தியும் இதுபோன்ற அதிகமான ஆதார பூர்வமான செய்திகளும் அல்குர்ஆனில் குறைவுகளும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன என்பதை தெளிவாகவே குறிப்பிடுகின்றன. என்னைப் பொறுத்த வரை குர்ஆன் மாற்றப்பட்டுள்ளது எனும் கருத்தைப் பொதிந்துள்ள செய்திகள் "முதவாதிர் " எனும் அதிக அறிவிப்பாளர் கொண்ட செய்திகளுடைய தரத்தையுடையதாகும். ........"
சுப்ஹானல்லாஹ், இறைவேதத்தின் இயல்பினைக் கெடுக்க ஏராளமான செய்திகளை இட்டுக் கட்டியது மட்டுமன்றி அவைக்கு அறிவிப்பாளர் தொடர் கொடுத்து வாதிடும் இவர் போன்றவர்களை அறிஞர்களாகக் கொண்ட ஷீஆ மதத்தினைப் போற்றும் உறவுகளே!!! உண்மையை உணரும் தருணம் எப்போது வரப் போகிறது...???
தொடரும்...

Post a Comment