பிரதான பிரிவுகள்:


ஷீஆ இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான நான்கு பிரிவுகள் உள்ளன.

  • அஸ்ஸபயிய்யா
  • அஸ்ஸைதிய்யா
  • அல்கைஸானிய்யா
  • அர்ராபிழா
  • அஸ்ஸபயிய்யா:


இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது 'அர்ரஜ்இய்யாவாகும்.
(அல் மிலல் வன்னிஹல் பாகம் பக்கம் 146)

உட்பிரிவுகள்

அல்குராபிய்யா (காகம்): الغرابية

அலி (ரழி) முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் (அலை) வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் (அலை) அவர்களை திட்டும் - சபிக்கும் கூட்டம்

(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)

அன்னமிரிய்யா:

முஹம்மத் அலி பாதிமா ஹஸன் ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான்.
(அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)

அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள நடித்தான்.

இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை

1. தாரீகுத் தபரி

2. அல்பிதாயா வன்னிஹாயா

3. மீஸானுல் இஃதிதால்

4. லிஸானுல் மீஸான்

5. தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 'ஷீஆ'இயக்கம் உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள் மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலானதலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது. தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் 'ஷீஆ'இயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது எனPழணல போன்ற ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அஸ்ஸைதிய்யா: الزيدية

அலி → ஹுஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸெய்த் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப்போக்குக் காணப்பட்டது. அதனால் மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு ஆற்றல் ஆளுமை நற்பண்புகள் என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.

இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர் முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியான வாஸில் பின் அதா அபூ ஹனீபா போன்றோரிடமும் கற்றுள்ளார். இதனால் இக்குழுவினர் அடிப்படை விடயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் கிளை விடயங்களில் ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.

ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்டபோரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தி இக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.

உட்பிரிவுகள்:

ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர் இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.

மூத்தோர்கள்: இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சியை அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது எமன் நாட்டில் கருத்து முரண்பாடுகளினால் பிளவுபட்டு ஸுலைமானிய்யா ஜாரூதிய்யா ஸாலிஹிய்யா போன்ற முப்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
(அல்மிலல் வந்நிஹல் பாகம் 1 பக்கம் 155)

பிந்தியோர்கள்: இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் 'காபிர்'கள் என்கின்றனர்.

கொள்கைகள்

    * இமாம்கள் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள்.

    * பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர்.

    * அல்லாஹ்வின் அறிவு: ஒவ்வொரு விடயமும் அது நடக்கும் போதுதான் அவனுக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது. நிகழ்வுகள் அவனது அறிவில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இது ஷீஆப் பிரிவில் மிகவும் வழிகெட்ட ராபிழாக்களினதும்கைஸானியாக்களினதும் கருத்திலிருந்து பிறப்பெடுத்ததாகும்.

(ஸெய்தின் கொள்கை இதற்கு மாற்றமானதாகும்.)

    * மஹ்தி: இவரின் வருகை பற்றி ஸெய்த் அவர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன. கைஸானிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா எனவும் இமாமிய்யாக்கள்: → முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி எனவும் ஏனைய பிரிவினர் இன்னும் பல மஹ்தீக்கள் வருவார்கள் என நம்புகின்றனர்.

ஷீஆக்கள்

அல் கைஸானிய்யா:


முஆவியா (ரழி) அவர்களின் மகன் யசீதின் ஆட்சிக் காலத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலா எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பலி தீர்க்க வேண்டும் என ஒரு குழு உருவானது. இவர்கள் முக்தார் இப்னு அபீ உபைத் என்பவனின் தலைமையில் 'தவ்வாபீன்என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவன் ஒரு மிகப் பெரிய பொய்யன் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்த இப்பிரிவினர் அவர்களுக்கு உதவி செய்யத்தவறியதனால் அவரை இழந்தோம். எனவே நாம் பாவிகள் என்று கருதி 'தவ்பாசெய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்க ஆரம்பித்தனர். உமையாக்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து பல தளபதிகளைக் கொலை செய்தனர்.

இவர்கள் 'தனாஸுக்என்ற மறுபிறப்புக் கொள்கையைக்கொண்டுள்ளனர். இவ்வாறு வழி கெட்ட கொள்கைகள் பல. 'தீன் என்பது ஒரு மனிதனுக்குக் கட்டுப்படல்என்றும் அம்மனிதர் அலிதான் என்றும் பிரசாரம் செய்தான் முக்தார். இவனது புனைப் பெயர்'கைஸானிய்யாஎன்று அழைக்கப்படுகிறது. ஷீஆக்களின் அனைத்து வழிகெட்ட கொள்கைகளும் இப்பிரிவினரிடமும் காணப்பட்டன.

தொடரும்.........

(நன்றி இணையம்)

Post a Comment