மன்பஉல் ஹுதா அரபுக் கல்லூரி
 -ஓட்டமாவடி, மீராவோடை-

1986 களில் மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதி, ஓட்டமாவடி, மீராவோடை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்களுக்கான அரபுக் கல்லூரியாகும். இலங்கை தேசத்தின் ஷீஆ கொள்கையின் காவலன்  எல்.டீ.ஏ. இஸ்ஹாக் என்பவனின் ஈரான் விஜயத்தின் பின்னர் அவனது கோரப்பிடியில் சிக்கிய இக்கல்லூரி ஷீஆக் கொள்கையை துளிர்விட ஆரம்பித்தது. கொள்கைப் பரப்பு விடயத்தில் ஆரம்ப காலங்களில் பெரும் தாக்கம் செலுத்தாவிட்டாலும் பிற்பட்ட காலங்களில் குறிப்பாக இன்றளவு தேசியத்திலும், தெற்காசியாவின் ஷீஆக்களின் கொள்கைப் பரப்பு மையமாக செயற்படுகிறது.
இதுவரைக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியாகியுள்ளனர். குறிப்பிட்ட சிலரைத் தவிர மிகுதி அனைவரும் இக்கொள்கையின் பரப்புனர்களாகவே செயற்படுகின்றனர். இவர்களின் பிற்பட்ட கால ஒன்றுகூடல்கள், அமர்வுகள் என சில நிர்வாகத் தேவை கருதி (ICC) எனும் ஒரு நிறுவனத்தை குறித்த பிரதேசத்தில்  உருவாக்கினர். இதன் செயற்பாடுகள் இப்பிராந்தியத்திலும், தேசியத்திலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

இக்கல்லூரியின் தோற்றம் முதல் இன்று வரை ஈரானின் பிரபல ஷீஆ மத பல்கலைக்கழகங்களான 'அல்கும்' மற்றும் ''அல்முஸ்தபா' போன்ற மற்றும் பல பல்கலைக்கழகங்களுக்கு உயர் கற்கைக்காக வருடந்தோரும் மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இன்றளவில் இக்கல்லூரியில் பட்டம் பெற்றவர்களில் ஈரான் சென்று கலைமானி, முதுமானி கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்து தாயகம் திரும்பியவர்கள், தற்போது கற்பவர்கள் என 30-40 க்கும் அதிகமானவர்களை கணக்கிட முடியும். இதில் இஸ்ஹாக், அப்துல் ஹலீம், மர்சூக், அலிகான், மஹ்தி இஸ்ஹாக் போன்ற வேக அழைப்பாளர்களும் உள்ளடங்குவர்.

இக்கல்லூரியின் மற்றுமொரு விஷேடம் இலங்கையின் எப்பாகத்தில் ஷீஆ விஷ விதைப்பு துளிர்விட ஆரம்பிக்கின்றதோ அங்கெல்லாம் இக்கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள், தொடர்புடையவர்களின் செயற்பாடுகள் இல்லாமல் இல்லை என்பது கள ஆய்வின் மற்றுமொரு முடிவாகும். மிக அண்மையில் 6வது பட்டமளிப்பு விழா இலங்கைக்கான ஈரானிய தூதுவரின் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: இணையம்
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment